ta_tw/bible/kt/abomination.md

4.7 KiB

அருவருப்பு, அருவருப்புகள், அருவருப்பான

விளக்கங்கள்:

“அருவருப்பு” என்ற வார்த்தை வெறுத்து ஒதுக்க கூடிய அல்லது விரும்பத்தகாத என்று அர்த்தப்படுத்தலாம்.

  • எகிப்தியர்கள் எபிரேயர்களை “அருவருப்பானவர்கள்” என்றனர். அப்படியெனில், எகிப்தியர்கள் எபிரேயர்களை வெறுத்ததுடன் அவர்களோடு எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளவோ அல்லது அருகில் செல்லவோ விரும்பவில்லை.
  • “யேகோவாக்கு அருவருப்பு” என்று சொல்லுகின்ற சில காரியங்களை வேதம் பட்டியலிடுகின்றது: அவையாவன: பொய், பெருமை, மனிதர்களை பலியிடுதல், விக்கிரக ஆராதனை, பாலுணர்வு சம்பந்தமான பாவங்களாகிய விபச்சாரம் மற்றும் வேசித்தனம்.
  • கடைசிக் காலத்தைக் குறித்து தன்னுடைய சீஷர்களுக்கு இயேசு கூறியபோது, தானியேல் தீர்கதரிசனத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசன வார்த்தையாகிய “அருவருப்பும் பாழ்க்கடிப்பும்” என்பது தேவனுக்கு எதிர்த்து நிற்க கூடியதாகவும், தேவனுடைய ஆராதனை கூடத்தை பாழ்படுத்துவதாகும் என்றார்.

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்:

  • “அருவருப்பு” என்ற வார்த்தையை “தேவன் வெறுக்கும் காரியம்” அல்லது “வெறுத்தொதுக்கும் காரியம்” அல்லது “வெறுத்தொதுக்கும் பழக்கவழக்கங்கள்” அல்லது “பொல்லாத நடவடிக்கைகள்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • சூழ்நிலைக்கு தக்கப்படி, “அருவருப்பிலிருத்தல்” என்பது “அதிகமாக வெறுக்கப்படுதல்” அல்லது “வெறுப்புணர்ச்சி” அல்லது “மொத்தமாக ஏற்றுக்கொள்ளாமல் போவது” அல்லது “வெறுப்புணர்ச்சிக்கு தள்ளப்படும் காரியம்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “அருவருப்பும் பாழ்க்கடிப்பும்” என்ற வார்த்தையை “மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அருவருப்பான காரியம்” அல்லது “மிகப்பெரிய துக்கத்தை உண்டாக்கும் வெறுப்புணர்ச்சி” என்றும் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: விபச்சாரம், பரிசுத்த இடத்தை அவமதித்தல், காலியான, பொய்யான தெய்வங்கள், பலிமுறை)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H887, H6292, H8251, H8262, H8263, H8441, G946