ta_tw/bible/other/vision.md

3.9 KiB

தரிசனம், தரிசனங்கள், கற்பனை

உண்மைகள்:

“தரிசனம்” என்ற வார்த்தை ஒரு நபர் பார்க்கிற ஒரு காரியத்தைக் குறிக்கிறது. முக்கியமாக இது, மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்காக தேவன் வழக்கத்திற்கு மாறாகவோ அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையிலோ காண்பிக்கிற ஒன்றாகும்.

  • வழக்கமாக, தரிசனம் என்பது ஒரு மனிதன் விழித்திருக்கும்போது காண்பது ஆகும். இருப்பினும், சிலநேரங்களில் ஒரு நபர் தூங்கிக்கொண்டு இருக்கும்போது கனவில் காண்கிற காரியங்களும் தரிசனம் ஆகும்.
  • தேவன் மிக முக்கியமான காரியங்களை மக்களுக்கு சொல்வதற்கு தரிசனங்களை கொடுக்கிறார். உதாரணமாக, பேதுரு புறஜாதிகளையும் ஏற்றுக்கொள்ளும்படி தேவன் விரும்புகிறார் என்பதை பேதுருவிற்கு கூறுவதற்காக அவருக்கு தரிசனம் காட்டப்பட்டது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • “தரிசனம் பார்த்தான்” என்ற சொற்றொடரை “தேவனிடமிருந்து வழக்கத்திற்கு மாறாக பார்த்தான்” என்றோ அல்லது “தேவன் அவனுக்கு சிறப்பான ஒன்றைக் காட்டினார்” என்றோ மொழிபெயர்க்கலாம்.
  • சில மொழிகளில் “தரிசனம்” அல்லது “கனவு” என்ற வார்த்தைகளுக்கு தனிப்பட்ட வார்த்தைகள் இல்லாமல் இருக்கலாம். ஆகவே “தானியேல் தன் சிந்தனையில் கனவுகளையும் தரிசனங்களையும் கண்டான்” என்பது போன்ற ஒரு வாக்கியத்தை “தானியேல் தூங்கும்போது, அவன் வித்தியாசமான காரியங்களைக் காணும்படி தேவன் செய்தார்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: கனவுகள்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2376, H2377, H2378, H2380, H2384, H4236, H4758, H4759, H7203, H7723, H8602, G3701, G3705, G3706