ta_tw/bible/other/dream.md

5.4 KiB

கனவு

வரையறை:

ஒரு கனவு என்பது மக்கள் தூங்கும் போது தங்கள் மனதில் பார்ப்பது அல்லது அனுபவிப்பது ஆகும்.

  • உண்மையில் நடப்பதைப்போல கனவுகள் பெரும்பாலும் தோன்றும், ஆனால் அவை அப்படிஇல்லை.
  • சில சமயங்களில் தேவன் ஒரு காரியத்தைஅறிந்துகொள்ள கனவு காணச் செய்கிறார். கனவிலும் கூட மக்களுடன் அவர் நேரடியாக பேசலாம்.
  • வேதாகமத்தில், குறிப்பிட்ட மக்களுக்கு ஒரு செய்தி கொடுக்க, தேவன் எதிர்காலத்தில் நடக்கவிருந்த ஏதோவொரு விஷயத்தில் குறிப்பிட்ட கனவுகளை அளித்தார்.
  • கனவு என்பது தரிசனம் என்பதிலிருந்து வித்தியாசமானது. ஒரு நபர் தூங்கும் போது கனவுகள் நடக்கும், ஆனால் தரிசனம் பொதுவாக ஒரு நபர் விழித்திருக்கும் போது நடக்கும்.

(மேலும் காண்க: தரிசனம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 8:2 யோசேப்பின் சகோதரர்கள் அவரைப் பகைத்தார்கள், ஏனென்றால் அவர்கள் தந்தை மிகவும் நேசித்தார், காரணம் அவர் அவர்களின் ஆட்சியாளராக இருப்பார் என்று யோசேப்பு சொப்பனம் கண்டிருந்தார்.
  • 8:6 ஒருநாள் இரவு, எகிப்தியர்கள் தங்கள் அரசர்களை அழைக்கும் பெயருடைய பார்வோன், தன்னை மிகவும் தொந்திரவு செய்த இரண்டு கனவுகளைக் கண்டான். அவனது ஆலோசகர்கள் யாரும் அவனுடைய கனவிற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை.
  • 8:7 தேவன் யோசேப்பிற்கு கனவுகளை விளக்குவதற்கு திறனை கொடுத்திருந்தார், எனவே பார்வோன் சிறைச்சாலையிலிருந்து யோசேப்பை அழைத்து வந்தான். யோசேப்பு, "தேவன் செழிப்பான ஏழு வருடங்களையும் அதற்குப் பிறகு பஞ்சம் நிறைந்த ஏழு வருடங்களை அனுப்புவார்" என்று கனவிற்கு விளக்கம் சொன்னார்.
  • 16:11 அன்று இரவு, கிதியோன் முகாமிற்குச் சென்றார்; மீதியானிய படைவீரர் ஒருவர் அவரது நண்பரிடம் தனது கனவைப் பற்றி சொன்னான். அந்த மனிதனின் நண்பன், "இந்த __ கனவின் _ அர்த்தம் கிதியோனின் இராணுவம் மீதியானிய இராணுவத்தை தோற்கடிக்கும்!" என்பதாகும் என்று கூறினான்.
  • 23:1 அவன் (யோசேப்பு) அவளை (மரியாள்) அவமானப்படுத்த விரும்பவில்லை, அதனால் அவளை அமைதியாக விவாகரத்து செய்ய திட்டமிட்டார். அவர் அதை செய்வதற்கு முன், ஒரு தேவதூதன் வந்து ஒரு கனவின் மூலம் அவனுடன் பேசினார்.

சொல் தரவு:

  • Strong's: H1957, H2472, H2492, H2493, G1797, G1798, G3677