ta_tw/bible/other/veil.md

4.1 KiB

முக்காடு, முக்காடுகள், முக்காடிடப்பட்ட, முக்காடு நீக்கப்பட்ட

விளக்கங்கள்

பொதுவாக “முக்காடு” என்ற வார்த்தை, தலையையோ அல்லது முகத்தையோ வெளியில் தெரியாதபடி மூடிக்கொள்வதற்குப் பயன்படுத்தப்படுகிற மெல்லிய துணியின் சிறிய அளவிலான பகுதியைக் குறிக்கும்.

  • மோசே கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து வெளியே வரும்போது, அவனுடைய முகத்தில் காணப்படும் பிரகாசத்தை ஜனங்கள் பார்க்கமுடியாதபடி முக்காட்டினால் தனது முகத்தை மூடினான்.
  • வேதாகமத்தில், பெண்கள் தங்கள் தலையை மூடிக்கொள்வதற்காக மட்டுமல்லாமல் பொது இடங்களிலும், ஆண்களுக்கு முன்பாகவும் தங்களுடைய முகத்தை மூடுவதற்காகவும் முக்காடு அணிந்தார்கள்.
  • “முக்காடிடுதல்” என்ற வாரத்தையின் வினைச்சொல்லின் அர்த்தம், முக்காட்டினால் ஏதோ ஒன்றை மூடுதல் என்பதாகும்.
  • சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில், “முக்காடு” என்ற வார்த்தையானது, மகா பரிசுத்த ஸ்தலத்தின் நுழைவாயிலை மறைப்பதற்காக பயன்படுத்தப்படும் தடிமனான திரையைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், “திரை” என்ற வார்த்தை அந்தப் பின்னணியில் கனமான, தடிமனான துணியைக் குறிப்பதாக இருந்தால் “திரை” என்பது சிறந்த வார்த்தை ஆகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • “திரை” என்ற வார்த்தையை, “மெல்லிய துணியால் மூடுதல்” அல்லது “துணியால் மூடுதல்” அல்லது “தலையை மூடுதல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • சில கலாச்சாரங்களில், பெண்கள் அணியும் முக்காட்டிற்கு ஏற்கனவே அதற்கான வார்த்தை இருக்கலாம். மோசேயின் முக்காட்டிற்கு, வித்தியாசமான வார்த்தையைக் கண்டுபிடிக்க அவசியம் ஏற்படலாம்.

(மேலும் பார்க்க: மோசே)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H7289, G2665