ta_tw/bible/other/vain.md

4.1 KiB

வீண், மாயை

விளக்கங்கள்

“வீண்” என்ற வார்த்தையானது, பயனற்ற ஒன்று அல்லது நோக்கமற்ற ஒன்று என்று பொருள்படும். வீணான பொருட்கள் காலியானவைகளும், மதிப்பில்லாதவைகளுமாக இருக்கின்றன.

  • “மாயை” என்ற வார்த்தையானது விலைமதிப்பற்றது அல்லது ஒன்றும் இல்லாத்தைக் குறிக்கும். மேலும் இது பெருமை அல்லது கர்வம் என்றும் பொருள்படும்.
  • பழைய ஏற்பாட்டில், விக்கிரகங்கள் வீணானவைகள் என்றும் அவைகளால் தப்புவிக்கவோ காப்பாற்றவோ முடியாது என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. அவைகள் விலைமதிப்பற்றவை மற்றும் பயனோ அல்லது நோக்கமோ இல்லாதவை.
  • ஏதாவது ஒரு காரியம் வீணாக செய்யப்பட்டால் , அக்காரியத்தினால் எந்தவொரு நற்பயனும் இல்லை என்று அர்த்தம். முயற்சி அல்லது செயல் எதையும் நிறைவேற்றவில்லை.
  • “வீணானவற்றில் நம்பிக்கை வைப்பது” என்பது உண்மையல்லாத அல்லது பொய்யான நம்பிக்கையைக் கொடுக்கும் ஒன்றின்மேல் விசுவாசம் வைப்பதாகும்.

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்:

  • பின்னணியின் அடிப்படையில் “வீண்“ என்ற வார்த்தையை “காலி” அல்லது “பயனற்றது” அல்லது “நம்பிக்கையற்றது” அல்லது “மதிப்பில்லாதது” அல்லது “அர்த்தமற்றது” என்று மொழிபெயர்க்கலாம்.
  • “வீணாக” என்ற சொற்றொடரை “பின்விளைவு இல்லாத” அல்லது “பின்விளைவைக் கொடுக்காத” அல்லது “காரணம் இல்லாத” அல்லது “நோக்கம் இல்லாத” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “மாயை” என்ற வார்த்தையை “கர்வம்” அல்லது “எவ்வளவேனும் மதிப்பில்லாத” அல்லது “நம்பிக்கை இல்லாத” என்றும் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க : பொய்யான கடவுள், மதிப்பு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H205, H1891, H1892, H2600, H3576, H5014, H6754, H7307, H7385, H7386, H7387, H7723, H8193, H8267, H8414, G945, G1432, G1500, G2755, G2756, G2757, G2758, G2761, G3150, G3151, G3152, G3153, G3154, G3155