ta_tw/bible/kt/worthy.md

6.0 KiB

மதிப்புள்ளது, மதிப்பு, தகுதியற்றது, மதிப்பற்றது

விளக்கங்கள்:

“மதிப்புள்ளது” என்ற பதம், ஒரு நபர் அல்லது ஒரு காரியம் மரியாதையை அல்லது கனத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியாக இருப்பதை குறிக்கிறது. “மதிப்பு உள்ள” என்றால் விலைமதிப்புள்ளது அல்லது முக்கியமானது என்று பொருளாகும். “மதிப்பற்றது” என்ற பதத்திற்கு, எந்த விலைமதிப்பும் இல்லாதது என்று பொருளாகும்.

  • மதிப்புள்ளதாக இருத்தல் என்பது விலைமதிப்புள்ளதாக இருத்தல் அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருத்தல் என்பதோடு தொடர்புடையதாகும்.
  • “தகுதியற்றதாக” இருத்தல் என்றால், எந்தவொரு சிறப்பான கவனத்தையும் பெற தகுதியற்றது என்று அர்த்தமாகும்.
  • மதிப்பில்லாததாக கருதுதல் என்பது மற்றொன்றைக் காட்டிலும் மதிப்புக் குறைந்ததாகக் கருதுதல் அல்லது கனப்படுத்துவதற்கோ அல்லது தயவு காட்டுவதற்கோ தகுதியற்றது என்று கருதுதல் ஆகும்.
  • “தகுதியற்றது” மற்றும் “மதிப்பற்றது” என்ற பதங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருந்தாலும் வெவ்வேறு அர்த்தமுடையதாகும். “தகுதியற்றதாக” இருத்தல் என்பது,எந்தவொரு கனத்தையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்குத் தகுதியற்றது என்று பொருளாகும். “மதிப்பற்றதாக” இருத்தல் என்றால் எந்த நோக்கமோ அல்லது மதிப்போ இல்லாததாகும்.

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்:

  • மதிப்புள்ளது” என்பதை “பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளது” “முக்கியமானது” அல்லது “விலைமதிப்புமிக்கது” என்று மொழிபெயர்க்கலாம்.
  • “மதிப்பு” என்ற வார்த்தையை “விலைமதிப்பு” அல்லது “முக்கியதத்துவம்” என்று மொழிபெயர்க்கலாம்.
  • “மதிப்புள்ளதாக இருத்தல்” என்ற சொற்றொடரை “விலைமதிப்புள்ளதாக இருத்தல்” அல்லது “முக்கியத்துவம் வாய்ந்ததாக இருத்தல்”என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “விட மதிப்பு வாய்ந்தது”என்ற சொற்றொடரை “விட விலைமதிப்பு மிக்கது” என்று மொழிபெயர்க்கலாம்.
  • பின்னணியின் அடிப்படையில், “தகுதியற்றது” என்ற பதத்தை, “முக்கியத்துவம் இல்லாதது” அல்லது “கனவீனமானது” அல்லது “பெற்றுக்கொள்ள தகுதியற்றது” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “பயனற்றது”என்ற வார்த்தையை “எந்த மதிப்பும் இல்லாதது” அல்லது “நோக்கம் எதுவும் இல்லாதது” அல்லது பயன் எதுவும் இல்லாதது” என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க : கனம்)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H117, H639, H1929, H3644, H4242, H4373, H4392, H4592, H4941, H6994, H7939, G514, G515, G516, G2425, G2661, G2735