ta_tw/bible/other/firstborn.md

5.0 KiB
Raw Permalink Blame History

முதல் பிறந்தவன்

வரையறை:

" முதல் பிறந்தவன் " என்பது, மற்றவர்கள் பிறப்பு பிறப்பதற்கு முன், முதலில் பிறக்கும் பிறப்பு அல்லது விலங்குகளின் பிள்ளையை குறிக்கிறது.

  • வேதாகமத்தில், "முதற்பேறான" என்பது பொதுவாக பிறந்த முதல் ஆண் பிள்ளையை குறிக்கிறது.
  • வேதாகமக் காலங்களில், முதற்பேறான மகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமும், மற்ற குடும்பங்களின் சொத்துக்கள் அவருடைய மற்ற மகன்களைவிட இரு மடங்காகவும் கொடுக்கப்படவேண்டி இருந்தது..
  • பெரும்பாலும் அது தேவனுக்கு பலி செலுத்தும்போது அது ஒரு முதல் பிறந்த ஆண் விலங்காக இருந்தது.
  • இந்த கருத்து உருவகமாகவும் பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, இஸ்ரவேல் தேசத்தார் தேவனுடைய முதல் மகன் என்று அழைக்கப்படுவதால், மற்ற நாடுகளைவிட விசேஷ சலுகைகளை தேவன் கொடுத்திருக்கிறார்.
  • தேவனுடைய மகனாகிய இயேசு, தேவனுடைய மகன் என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் மற்ற எல்லோர்மேலுமுள்ள அவருடைய முக்கியத்துவத்தையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "முதல் பிறந்த" என்ற வார்த்தையானது உரையில் தனியாக நிகழும்போது, ​​அது "முதல் பிறந்த ஆண்" அல்லது "முதல் மகன்" என்று மொழிபெயர்க்கப்படலாம், ஏனெனில் இது மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது. (பார்க்கவும்: போதுமான அறிவு மற்றும் புரிந்துகொள்ளப்பட்ட தகவல்
  • இந்த வார்த்தை மொழிபெயர்க்க மற்ற வழிகளில் "முதல் பிறந்த மகன்" அல்லது "மூத்த மகன்" அல்லது "எண் ஒன்று மகன்" என்பவைகளைச்சேர்க்க முடியும்.
  • உருவகப்பூர்வமாக இயேசுவைக் குறிக்க பயன்படுத்தும்போது, "எல்லாவற்றிற்கும் அதிகாரம் உடைய குமாரன்" அல்லது "மரியாதைக்குரிய குமாரன்" என்று பொருள்படும் வார்த்தையோ சொற்றொடரோடும் இது மொழிபெயர்க்கப்படலாம்.
  • எச்சரிக்கை: இயேசுவைப் பற்றி இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பின் பொருள் அவர் படைக்கப்பட்டிருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

(மேலும் காண்க: வாரிசுரிமை, பலி, மகன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1060, H1062, H1067, H1069, G4416, G5207