ta_tw/bible/other/divination.md

3.8 KiB

ஜோதிடம், ஜோதிடர், குறிசொல்லுதல், குறிசொல்பவர்

வரையறை:

“ஜோதிடம்” மற்றும் “குறிசொல்லுதல்” என்ற வார்த்தைகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகில் உள்ள ஆவிகளிடமிருந்து தகவலை பெற முயற்சிப்பதைக் குறிக்கிறது. இதைச் செய்யும் ஒரு நபர் சிலநேரங்களில் "ஜோதிடர்" அல்லது " குறிசொல்பவர் " என்று அழைக்கப்படுகிறார்.

  • பழைய ஏற்பாட்டு காலங்களில், இஸ்ரவேலர்கள் ஜோதிடம் மற்றும் குறிசொல்லுதல் கூடாது என்று தேவன் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
  • ஊரிம், தும்மிம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தம்மிடம் இருந்து தகவல் பெற தேவன் தம் மக்களை அனுமதித்தார். அந்த நோக்கத்திற்காக பிரதான ஆசாரியர் பயன்படுத்த கற்களைக் கொண்டிருந்தார். ஆனால் தீய சக்திகளின் உதவியைப்பெற அவர் தம் மக்களை அனுமதிக்கவில்லை.
  • புறஜாதி ஜோதிடர்கள் ஆவி உலகத்திலிருந்து தகவல்களைத் தேடுவதற்கு வெவ்வேறு முறைகளை பயன்படுத்தினர். சில நேரங்களில் அவர்கள் இறந்த மிருகத்தின் உட்புற பகுதியை சோதித்து அல்லது தரையில் எலும்பு மிருகங்களை எறிந்து, அவைகள் விழுவதிலிருந்து அவர்கள் பொய் தெய்வங்களிலிருந்து செய்திகளைப் புரிந்துகொள்வார்கள்.
  • புதிய ஏற்பாட்டில், இயேசுவும் அப்போஸ்தலர்களும் ஜோதிடம், சூனியம், மந்திரம் ஆகியவற்றை நிராகரித்தனர். இந்த செயல்முறைகள் எல்லாம் தீய சக்திகளின் சக்தியைப் பயன்படுத்துவதோடு, தேவனால் கண்டனம் செய்யப்படுகின்றன.

(மேலும் காண்க: அப்போஸ்தலன், தவறான கடவுள், மந்திரம், சூனியம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1870, H4738, H5172, H6049, H7080, H7081, G4436