ta_tw/bible/other/consume.md

4.7 KiB

உட்கொள், நுகர்வு, உட்கொள்ளப்படும், உட்கொள் ளப்படுதல்

வரையறை:

" உட்கொள் " என்ற வார்த்தையின் அர்த்தம் ஏதோ ஒன்றைப் பயன்படுத்தித் தீர்ப்பதாகும். இது பல உருவக அர்த்தங்கள் உள்ளன.

  • வேதாகமத்தில், "அழி" என்ற வார்த்தை பெரும்பாலும் விஷயங்களை அல்லது மக்களை அழிப்பதை குறிக்கிறது.
  • ஒரு நெருப்பு பொருட்களை உட்கொண்டதாக கூறப்படுகிறது, அதாவது அவர்களை எரியும் வகையில் அழித்துவிடுகிறது என்பதாகும்.
  • தேவன் "பட்சிக்கிற அக்கினி" என்று விவரிக்கப்படுகிறார், இது பாவத்திற்கு எதிரான அவருடைய கோபத்தை விவரிக்கிறது. மனந்திரும்பாத பாவிகளுக்கு அவருடைய கோபம் கடுமையான தண்டனையுடன் வருகிறது.
  • உணவு உட்கொள்வதன் பொருள் ஏதாவது சாப்பிட அல்லது குடிப்பதாகும்.
  • ”நிலத்தைப் பட்சித்தல்” என்ற சொற்றொடரை, “நிலத்தை அழித்தல்” என்று மொழிபெயர்க்கலாம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • நிலத்தையோ அல்லது மக்களையோ பட்சித்தல் என்ற பின்னணியில் இந்த வார்த்தையை “அழித்தல்” என்று மொழிபெயர்க்கலாம்.
  • ”பட்சி” என்று அக்கினியைக் குறிப்பிடும்போது, அதை “எரித்துவிடு” என்று மொழிபெயர்க்கலாம்.
  • மோசே கண்ட எரிகிற முட்செடியானது “பட்சிக்கப்படவில்லை” என்பதை “எரிக்கப்படவில்லை” அல்லது எரியவில்லை” என்று மொழிபெயர்க்கலாம்.
  • ”பட்சி” என்பது சாப்பிடுவதைக் குறிக்கும்போது, அதை “சாப்பிடு” அல்லது “உட்கொள்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • ஒருவருடைய பெலன் “பட்சிக்கப்படுவதாக” இருந்தால், அவருடைய பெலன் “தீர்ந்துவிட்டது” அல்லது போய்விட்டது” என்று அர்த்தம்.
  • " தேவன் "பட்சிக்கிற அக்கினி" என்பதை மொழிபெயர்க்கலாம், "தேவன் எரிக்கிற அக்கினியைப் போன்றவர்" அல்லது "தேவன் பாவத்திற்குஎதிரானவர், பாவிகளை அக்கினிஅழிப்பதுபோல் அழிக்கிறார்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: அழி, கடுங்கோபம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H398, H402, H1086, H1104, H1197, H1497, H1846, H2000, H2628, H3615, H3617, H3631, H3857, H4127, H4529, H4743, H5486, H5487, H5595, H6244, H6789, H7332, H7646, H7829, H8046, H8552, G355, G1159, G2618, G2654, G2719, G5315, G5723