ta_tw/bible/other/confirm.md

3.5 KiB

உறுதிப்படுத்து, உறுதிப்படுத்துகிறது, உறுதிப்படுத்திய, உறுதிப்படுத்தல்

வரையறை:

"உறுதிப்படுத்து" மற்றும் "உறுதிப்படுத்தல்" என்ற சொற்கள் ஒரு காரியம் உண்மையானது அல்லது நம்பகமானவை எனக் குறிப்பிடுகின்றன அல்லது உறுதிப்படுத்துகின்றன.

  • பழைய ஏற்பாட்டில், தேவன் தம்முடைய உடன்படிக்கையை "உறுதிப்படுத்துவார்" என்று தம் மக்களிடம் சொல்கிறார். அந்த உடன்படிக்கையில் அவர் செய்த வாக்குறுதியை அவர் கடைப்பிடிப்பார் என்று அவர் கூறுகிறார்.
  • ஒரு ராஜா "உறுதிப்படுத்தப்பட்டால்", அவரை ராஜாவாக மாற்றுவதற்கான முடிவை மக்கள் ஒப்புக்கொண்டு, ஆதரவளித்தனர் என்று பொருளாகும்.
  • ஒரு நபர் எழுதியதை உறுதி செய்வது, என்பது அவர் எழுதியது என்பது உண்மைதான்என்று கூறுவதாகும்.
  • நற்செய்தியின் "உறுதி" என்பது அது உண்மை என்று காட்டும் விதத்தில் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு கற்பிப்பதாகும்.
  • உறுதிமொழியை உறுதிப்படுத்துவது என்பது உண்மையானது அல்லது நம்பகமானது என்று வலியுறுத்துவது அல்லது சத்தியம் செய்வதாகும்.
  • "உறுதிப்படுத்த" மொழிபெயர்ப்பதற்கான வழிகள், "உண்மை எனக் கூறப்படும்" அல்லது "நம்பிக்கைக்குரியதாக நிரூபணம்" அல்லது "ஒப்புக்கொள்" அல்லது "உறுதி" அல்லது "வாக்குறுதி" ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம்.

(மேலும் காண்க: உடன்படிக்கை, உறுதிமொழி, நம்பிக்கை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H553, H559, H1396, H3045, H3559, H4390, H4672, H5414, H5975, H6213, H6965, G950, G951, G1991, G2964, G3315, G4300, G4972