ta_tw/bible/other/census.md

3.6 KiB

மக்கள் தொகை கணக்கெடுப்பு

வரையறை:

"மக்கள்தொகை கணக்கெடுப்பு" என்பது ஒரு நாடு அல்லது பேரரசின் மக்களின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமான கணக்கெடுப்பைக் குறிக்கிறது.

  • இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, ​​கானானுக்குள் நுழைவதற்கு முன்பே, இஸ்ரவேல் மனுஷர் கணக்கிடப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டபோது பழைய ஏற்பாடு வெவ்வேறு காலங்களில் பதிவுசெய்கிறது.
  • எத்தனை பேர் வரி செலுத்தவேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காக பெரும்பாலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • உதாரணமாக, யாத்திராகமத்தில் ஒருமுறை இஸ்ரவேல் ஜனங்களைக் கணக்கிட்டு, ஒவ்வொருவரும் ஆலயத்தை கவனித்துக்கொள்வதற்காக ஒவ்வொரு அரைசேக்கல் செலுத்துவார்கள் என்று கணக்கிடப்பட்டது..
  • இயேசு குழந்தையாக இருந்தபோது, ​​ரோமானிய அரசாங்கம் தங்கள் பேரரசில் வாழ்ந்த அனைவருக்கும் வரி செலுத்துமாறு கோருவதற்கு ஒரு கணக்கெடுப்பு செய்தது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்

  • இந்த வார்த்தையை மொழிபெயர்க்கக்கூடிய சாத்தியமான வழிகள், "பெயர்களை எண்ணுதல்" அல்லது "பெயர்களின் பட்டியல்" அல்லது "சேர்க்கை" என்று மொழிபெயர்க்கலாம்..
  • "ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு" என்ற சொற்றொடர் "மக்கள் பெயர்களைப் பதிவு செய்தல்" அல்லது "மக்களைப் பதிவு செய்தல்" அல்லது "மக்கள் பெயர்களை எழுது" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: தேசம், ரோம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3789, H5674, H5921, H6485, H7218, G582, G583