ta_tw/bible/other/biblicaltimeyear.md

3.3 KiB

ஆண்டு, ஆண்டுகள்

வரையறை:

சொல்லர்த்தமாக பயன்படுத்தப்படும்போது, ​​வேதாகமத்தில் "ஆண்டு" என்ற வார்த்தை 354 நாட்கள் நீடிக்கும் காலத்தைக் குறிப்பிடுகிறது. சந்திர நாட்காட்டி முறைப்படி இது நிலவு முழுவதும் பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது.

  • பூமியானது சூரியனை சுற்றி வருவதற்கு ஆகும் நேரத்தின் அடிப்படையில், நவீன கால சூரிய நாட்காட்டியில் ஒரு வருடமானது 365 நாட்கள் 12 மாதங்களாக பிரிக்கப்படும்.

இரண்டு நாட்காட்டி முறைகளிலும் ஒரு வருடம் 12 மாதங்கள் கொண்டதாகும். ஆனால் ஒரு சந்திர ஆண்டுக்கு சந்திர ஆண்டு 11 நாட்களுக்கு குறைவாக இருப்பதால், சந்திர நாட்காட்டியில் ஆண்டுக்கு கூடுதலாக 13 வது மாதம் சேர்க்கப்படும். இது இரண்டு நாட்காட்டிகளை இன்னும் ஒன்றுக்கொன்று தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

  • வேதாகமத்தில், "வருடம்" என்ற வார்த்தை, ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும் சமயத்தில் ஒரு பொது நேரத்தைக் குறிக்க உருவாக அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உதாரணங்கள், "யெகோவாவின் ஆண்டு" அல்லது "வறட்சியின் ஆண்டில்" அல்லது "கர்த்தருடைய சாதகமான வருஷம்" ஆகியவை அடங்கும். இந்த சூழல்களில், "ஆண்டு" என்பது "நேரம்" அல்லது "பருவம்" அல்லது "காலம்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: மாதம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3117, H7620, H7657, H8140, H8141, G1763, G2094