ta_tw/bible/other/biblicaltimemonth.md

3.7 KiB

மாதம், மாதங்கள், மாதாந்திர

வரையறை:

"மாதம்" என்ற வார்த்தை நான்கு வாரங்கள் நீடிக்கும் காலத்தை குறிக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சந்திர அல்லது சூரிய நாட்காட்டி பயன்படுத்தப்படுகிறதா என்பதைப் பொறுத்து நாட்கள் எண்ணிக்கை மாறுபடும்.

  • சந்திர நாட்காட்டியில், ஒவ்வொரு மாதத்தின் நீளமும் பூமியின் சுற்றுப்பாதைக்கு சுமார் 29 நாட்களுக்குச் செல்ல வேண்டிய நேரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டது. இந்த அமைப்பில் ஒரு வருடத்தில் 12 அல்லது 13 மாதங்கள் உள்ளன. ஆண்டுதோறும் 12 அல்லது 13 மாதங்கள் இருந்தபோதிலும், முதல் மாதமானது வேறுபட்ட பருவமாக இருந்தாலும், எப்போதும் அதே பெயரைக் கொண்டதாகஉள்ளது.
  • "புதிய நிலவு", அல்லது சந்திரனின் தொடக்கத்திலுள்ள ஒளியின் துவக்க கட்டம், சந்திர நாட்காட்டியில் ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது.
  • வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாதங்களின் பெயர்கள் அனைத்தும், சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் இருந்தது, இது இஸ்ரவேல் மக்கள் பயன்படுத்தும் முறையாக இருந்தது. நவீன யூதர்கள் இந்த நாட்காட்டியை மார்க்க நோக்கங்களுக்காக இன்றும்கூட பயன்படுத்துகிறார்கள்.

சூரியனைச் சுற்றிவர பூமிக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதன்அடிப்படையில் நவீன கால சூரிய நாட்காட்டி உருவாக்கப்பட்டது( (சுமார் 365 நாட்கள்) இந்த முறையில், ஒரு ஆண்டு எப்போதும் 12 மாதங்களாக பிரிக்கப்படுகிறது, 28 முதல் 31 நாட்கள் வரை ஒவ்வொரு மாதத்தின் நீளம் கொண்டதாக இருக்கிறது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2320, H3391, H3393, G3376