ta_tw/bible/other/bearanimal.md

1.9 KiB

கரடி, கரடிகள்

விளக்கம்:

ஒரு கரடி என்பது ஒரு பெரிய, நான்கு கால்கள்கொண்டதும், அடர்த்தியான உரோமம் உடையதும் கறுப்பு அல்லது அடர்ந்த பழுப்பு நிறமுடையதும், கூர்மையான பற்கள் மற்றும் நகங்கள் கொண்டதுமான விலங்காகும். வேதாகமக் காலங்களில் இஸ்ரவேலில் கரடிகள் மிகச் சாதாரணமாகக் காணப்பட்டன.

  • இந்த விலங்குகள் காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கின்றன; அவை மீன், பூச்சிகள் மற்றும் தாவரங்களை சாப்பிடுகின்றன.
  • பழைய ஏற்பாட்டில், கரடி வலிமைக்கு அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆடுகளை மேய்க்கையில், மேய்ப்பன் தாவீது ஒரு கரடியுடன் சண்டையிட்டு அதைத் தோற்கடித்தார்.

  • காட்டில் இருந்து இரண்டு கரடிகள் வந்து, எலிசா தீர்க்கதரிசியை கேலி செய்த இளைஞர்களைத் தாக்கின.

(மேலும் காண்க: தாவீது, எலிஷா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1677, G715