ta_tw/bible/other/ambassador.md

3.5 KiB

அரசுதூதர், ஸ்தானாதிபதிகள், பிரதிநிதி, பிரதிநிதிகள்

விளக்கம்:

தூதர் என்பவர் அரசினால் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவனது நாட்டை அயல்நாடுகளில் பிரதிபலிப்பவன். இவ்வார்த்தையை உருவகமாக மொழிப்பெயர்க்க வேண்டுமானால் பொதுவாக “பிரதிநிதி” எனலாம்.

  • தூதர் அல்லது பிரதிநிதி என்பவர் ஒருவரின் செய்தியையோ அல்லது அரசாங்கத்தின் செய்தியையோ கூறுபவன்.
  • “பிரதிநிதி” என்ற பொது வார்த்தை அவரை அனுப்பினவரின் சார்பாக செயல்படுவதற்கும் மேலும் பேசுவதற்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டவன்.
  • பவுல் அப்போஸ்தலன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் “ஸ்தானாதிபதிகள்” அல்லது “பிரதிநிதிகள்” என்று போதிக்கிறார் ஏனெனில் இவர்கள் கிறிஸ்துவை உலகத்திற்கு பிரதிபலித்து அவரது சத்தியத்தை போதிப்பவர்கள்.
  • சூழ்நிலைக்கேற்ப, இவ்வார்த்தையை “அதிகாரப்பூர்வ பிரதிநிதி” அல்லது “நியமிக்கப்பட்ட தூதுவர்” அல்லது “தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி” அல்லது “தேவனால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி” என்று மொழிபெயர்க்கலாம்.
  • ஒரு “பணி ஒப்படைக்கப்பட்ட தூதுவர்” என்பதை “சில அதிகாரப்பூர்வமான தூதுவர்கள்” அல்லது “நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளின் குழு” அல்லது “எல்லா மக்களுக்கும் பேசுவதற்கு அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட மக்கள் கூட்டம்” என்றும் மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: தெரியாதவைகளை எவ்வாறு மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: தூதுவன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3887, H4135, H4136, H4397, H6735, H6737, G4243