ta_tw/bible/other/afflict.md

5.0 KiB

துயரப்படுதல், துன்புறுத்து, தொல்லைப்படுத்தல், துன்புறுத்துதல், தொல்லைப்படுத்தல், தொல்லைகள் கொடுத்தல்

விளக்கம்:

“துன்புறுத்துதல்” என்பது மற்றவர்களை வேதனையடையச்செய்வது அல்லது பாதிப்பு உண்டாக்குவது. “துன்புறுத்தல்” என்பது ஒருவித வியாதி, உணர்ச்சியின் வேதனை, அல்லது இதனிமித்தம் ஏற்படும் பேரிடர்.

  • தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு வியாதிஅல்லது கஷ்டத்தை கொடுப்பது பாவத்திலிருந்து மனந்திருந்தி மறுபடியும் அவர்கள் அவரிடம் திரும்புவதற்க்காகத்தான்.
  • எகிப்தின் இராஜா தேவனுக்கு கீழ்படிய மறுத்தபடியினால் தேவன் எகிப்தியர்கள் மீது தொல்லைகள் அல்லது வாதைகளை கொண்டுவந்தார்.
  • “தொல்லைகளை சந்தித்தல்” என்பது பலவித வேதனைகளால் துன்பப்படுதலாகிய, வியாதி, உபத்திரவம் அல்லது உணர்ச்சிகளினால் உண்டாகும் துயரம்.

மொழிபெயர்புக்கான சிபாரிசுகள்:

  • துயரம் என்பதை “பிறர் துன்பத்தை அனுபவிக்க காரணமாயிருத்தல்” அல்லது பிறர் துன்பப்பட காரணமாகுதல்” அல்லது “துன்பம் ஏற்பட காரணமாயிருத்தல்” என்றும் மொழிப்பெயர்க்கலாம்
  • சில சூழ்நிலையில் துன்பப்படுதல் என்பதை “நட்டப்பதற்கு” அல்லது “வருகின்ற” அல்லது “வேதனையை கொண்டு வருகின்ற” என்றும் மொழி பெயர்க்கலாம்.
  • “குஷ்டத்தினால் ஒருவன் துன்பப்படுகிறான்” என்ற வாக்கியத்தை “ஒருவன் குஷ்டரோக வியாதியினால் துன்பப்படுகிறான்” என்றும் மொழி பெயர்க்கலாம்.
  • வியாதியோ அல்லது பேரிடரோ மக்கள் மீதோ அல்லது மிருகங்கள் மீதோ அனுப்பப்பட்டு என்பதை, “துன்பத்துக்கு காரணமான” என்றும் மொழி பெயர்க்கலாம்.
  • சூழ்நிலைக்கு ஏற்ப, “துயரம்” என்பதை “பெருஞ்சேதம்” அல்லது “வியாதி” அல்லது “வேதனை” அல்லது “பெரும் துயரம்” என்றும் மொழி பெயர்க்கலாம்.
  • “துயரப்படுதல்” என்பதை “இதினால் துன்பப்படுதல்” அல்லது “வியாதியினால்” என்றும் மொழி பெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: தொழுநோய், கொள்ளைநோய், துன்பம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H205, H1790, H3013, H3905, H3906, H4157, H4523, H6031, H6039, H6040, H6041, H6862, H6869, H6887, H7451, H7489, H7667, G2346, G2347, G2552, G2553, G2561, G3804, G4777, G4778, G5003