ta_tw/bible/names/rahab.md

3.3 KiB

ராகாப்

உண்மைகள்:

ராகாப் இஸ்ரவேலர் எரிகோவைத் தாக்கியபோது அங்கே வாழ்ந்த ஒரு பெண். அவள் ஒரு விபச்சாரி.

இஸ்ரவேலர் அதைத் தாக்கும் முன் எரிகோவில் உளவு பார்க்க வந்த இரண்டு இஸ்ரவேலர்களை ராகாப் மறைத்து வைத்திருந்தார். அந்த வேவுகாரர்கள் இஸ்ரவேல் முகாமுக்குத் திரும்பிச் செல்ல உதவினாள். ராகாப் கர்த்தரில் ஒரு விசுவாசி ஆனார். எரிகோ அழிக்கப்பட்டபோது அவளும் அவளுடைய குடும்பமும் காப்பாற்றப்பட்டார்கள்; அவர்கள் எல்லாரும் இஸ்ரவேலரோடு வாழ்ந்தார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: இஸ்ரேல், எரிகோ, விபச்சாரி)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 15:1 அந்த நகரத்தில் வேவுகாரர்களை மறைத்து, பின்னர் அவர்களை தப்பிக்க உதவிய ராகாப் என்ற விபச்சாரிஅந்த நகரத்தில் வசித்து வந்தார். அவள் தேவனை நம்பியதால் அவள் இதை செய்தாள். இஸ்ரவேலர்கள் எரிகோவை அழிக்கும்போது __ ராகாபையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்ற அவர்கள் வாக்களித்தனர்.
  • 15:5 தேவன் கட்டளையிட்டபடி இஸ்ரவேலர் அனைத்தையும் நகரத்தில் அழித்தனர். __ ராகாப்__ மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் கொல்லப்படவில்லை. அவர்கள் இஸ்ரவேலரின் பாகமாக ஆனார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H7343, G4460