ta_tw/bible/names/joab.md

2.1 KiB

யோவாப்

வரையறை:

ராஜாவாகிய தாவீதின் ஒரு முக்கிய இராணுவத் தலைவனாக யோவாப் இருந்தார்.

  • தாவீது ராஜாவாகு முன்னே யோவாபு தனது விசுவாசமுள்ள சீடர்களில் ஒருவராக இருந்தார்.
  • பிற்பாடு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாக தாவீது ஆட்சி செய்தபோது யோவாப் தாவீது ராஜாவின் தளபதியாக ஆனார்.
  • யோவாப் தாவீதின் மருமகனாக இருந்தார், ஏனென்றால் அவருடைய தாயார் தாவீதின் சகோதரிகளில் ஒருவராக இருந்தார்.
  • தாவீதின் மகன் அப்சலோம் அரசாட்சியை எடுத்துக்கொள்ள முயன்றபோது அவரைக் காட்டிக்கொடுத்தபோது,தாவீது ​​ராஜாவைப் பாதுகாக்க யோவாப் அப்சலோமைக் கொன்றார்.
  • யோவாப் மிகவும் தீவிரமான போர்வீரராக இருந்தார், இஸ்ரவேலின் எதிரிகள் பலரைக் கொன்றார்.

(மேலும் காண்க: அப்சலோம், தாவீது)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3097