ta_tw/bible/names/absalom.md

2.9 KiB

அப்சலோம்

உண்மைகள்:

தாவீது ராஜாவின் மூன்றாவது மகன் அப்சலோம் ஆவான். அவன் தனது அழகான தோற்றம் மற்றும் கோபமுள்ள குணாதிசயம் ஆகியவற்றால் நன்கு அறியப்பட்டவன்.

  • அப்சலோமின் சகோதரியாகிய தாமாரை, அப்சலோமின் ஒன்றுவிட்ட சகோதரனான அம்னோன் பாலியல் பலாத்காரம் செய்தபோது, ​​அப்சலோம் அம்னோனைக் கொலைசெய்வதற்கு ஒரு திட்டம் தீட்டினான்.
  • அம்னோனைக் கொலை செய்தபின், அப்சலோம் கேசூரின் பகுதிக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருடங்கள் தங்கினான். (இந்தக் கேசூர் அவனுடைய தாயாரின் ஊர் ஆகும்) தாவீது ராஜா எருசலேமுக்கு வரும்படி அவனை அழைத்தனுப்பினான்; ஆனால் இரண்டு வருடங்கள் அப்சலோம் தன்னைக் காண தாவீது அனுமதிக்கவில்லை.

அப்சலோம் சிலரைத் தாவீது ராஜாவுக்கு எதிராகத் திருப்பினார், அவருக்கு எதிராக ஒரு கலகம் செய்தான். தாவீதின் படை அப்சலோமுக்கு எதிராகப் போரிட்டு அவனைக் கொன்றுவிட்டது. இது நடந்தபோது தாவீது மிகவும் வருத்தப்பட்டார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கேஷூர், அம்னோன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H53