ta_tw/bible/names/corinth.md

2.5 KiB

கொரிந்து, கொரிந்தியர்

உண்மைகள்:

கொரிந்து கிரேக்க நாட்டின் ஒரு நகரமாக இருந்தது, ஏதேன்ஸ்க்கு சுமார் 50 மைல்கள் மேற்காக இருந்தது. கொரிந்துவில் வாழ்ந்த மக்களே கொரிந்தியர் ஆவர்.

  • கொரிந்து, ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒரு சபை இருந்த இடமாகும்.
  • புதிய ஏற்பாட்டு நூல்கள், 1 கொரிந்தியர் மற்றும் 2 கொரிந்தியர் ஆகியன கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய கடிதங்கள் ஆகும்.
  • தன்னுடைய முதல் மிஷனரி பயணத்தில் பவுல் கொரிந்துவில் சுமார் 18 மாதங்களுக்கு தங்கினார்.
  • கொரிந்துவில் இருந்த சமயத்தில் பவுல் விசுவாசிகளான ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாவை சந்தித்தார்.
  • தீமோத்தேயு, தீத்து, அப்பொல்லோ, சீலா, கொரிந்தியருடன் தொடர்புடைய மற்ற ஆரம்பகால தலைவர்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அப்போலோ, தீமோத்தேயு, தீத்து)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2881, G2882