ta_tw/bible/names/capernaum.md

2.4 KiB

கப்பர்நகூம்

உண்மைகள்:

கப்பர்நகூம் கலிலேயாக் கடலின் வடமேற்கு கரையோரத்தில் ஒரு மீன்பிடி கிராமமாக இருந்தது.

கலிலேயாவில் போதிக்கும் போதெல்லாம் இயேசு கப்பர்நகூமில் தங்கினார்.

  • அவருடைய சீஷர்களில் அநேகர் கப்பர்நகூமிலிருந்து வந்தவர்கள்.
  • இயேசு இறந்துபோன ஒரு சிறுபெண்ணை மீண்டும் உயிரோடு கொண்டுவருவது உட்பட, இந்த நகரத்தில் பல அற்புதங்களை செய்தார்.

இயேசு, மக்களை வெளிப்படையாகக் கடிந்து கொண்ட மூன்று நகரங்களில் ஒன்றாக கப்பர்நகூம் இருந்தது, ஏனென்றால் அவர்கள் மக்கள் அவரை நிராகரித்து அவருடைய செய்தியை நம்பவில்லை. அவர்களுடைய அவிசுவாசத்திற்கு தேவன் அவர்களை தண்டிப்பார் என்று அவர் எச்சரித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கலிலேயா, கலிலேயாக் கடல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2584