ta_tw/bible/names/amorite.md

4.5 KiB

அம்மோரியர், அம்மோரியர்கள்

உண்மைகள்:

அம்மோரியர்கள் பலம் வாய்ந்த மக்கள் கூட்டம் இவர்கள் நோவாவின் பேரனாகிய கானானின் சந்ததியின் வழி வந்தவர்கள்.

  • அவர்களின் பெயருக்கு “உயர்ந்தவர்கள்” என்று அர்த்தப்படுத்தலாம் இது இவர்கள் வாழ்ந்தமிக உயர்ந்த இடம் அல்லது இவர்கள் அறியப்பட்டது உயர்ந்த நிலையில்.
  • அமோரியர்கள் யோர்தான் நதியின் இரு கரைகளிலும் வாழ்ந்து வந்தனர். ஆயீ பட்டணம் அம்மோரியர்களின் குடியிருப்புகள்
  • தேவன் “அம்மோரியர்களின் பாவம்” என்று குறிப்பிடுவது அவர்கள் தவறான கடவுள்களை வணங்கினதையும் மற்றும் பாவ வழிகளோடு உண்டான தொடர்பையும் குறிக்கும்.
  • யோசுவா தேவன் கட்டளையிட்ட வண்ணம், இஸ்ரவேல் மக்கள் மூலம் அம்மோனியார்களை அழித்தான்.

வேதாகமக் குறிப்புக்கள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • __15:7__கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கானானிலுள்ள இன்னொரு மக்கள் கூட்டமான எமோரியரின் ராஜா, கிபியோனியர் இஸ்ரவேலோடு சமாதான உடன்படிக்கை செய்ததைக் கேள்விப்பட்டு, கிபியோனியரை முறியடிக்க அவர்கள் மற்ற மக்கள் கூட்டத்தோடு ஒன்று சேர்ந்து திரளான இராணுவத்துடன் அவர்களைத் தாக்கினர்.
  • __15:8__யோசுவா இஸ்ரவேலரின் சேனைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, கிபியோனியருக்கு ஆதரவாக அதிகாலையில் விரைந்து வந்து எமோரியரைத் தாக்கி எமோரியப் படையை ஆச்சரியப்பட செய்தனர்.
  • 15:9 அன்றையத்தினம் கடவுள் இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்தார். அவர் எமோரியர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, கல்மழையை அனுப்பினார். அதனால் அநேக எமோரியர்கள் இறந்தார்கள்.
  • 15:10 இஸ்ரவேல் மக்கள் எமோரியரை முற்றிலும் முறியடிக்கத் தேவையான நேரம் கிடைக்கும் படியாகக் கடவுள் சூரியனை வானத்தில் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்தார். அந்நாளில் கடவுள் இஸ்ரவேலருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

சொல் தரவு:

  • Strong's: H567,