ta_tw/bible/kt/soul.md

3.9 KiB

ஆத்துமா, ஆத்துமாக்கள்

வரையறை:

ஆத்துமா உட்புறம், கண்ணுக்கு தெரியாத, மற்றும் ஒரு நபரின் நித்திய பகுதியாகும். இது ஒரு நபரின் உடல் அல்லாத பகுதியை குறிக்கிறது.

  • " ஆத்துமா " மற்றும் "ஆவி" ஆகிய சொற்கள் இரண்டு வேறுபட்ட கருத்தாக்கங்களாக இருக்கலாம் அல்லது அவை ஒரே கருத்தைக் குறிக்கும் இரண்டு சொற்கள் இருக்கலாம்.
  • ஒருவர் இறந்துவிட்டால், அவரது ஆத்மா உடலை விட்டு செல்கிறது.
  • "ஆத்மா" என்ற வார்த்தை சில நேரங்களில் முழு நபரைக் குறிப்பதற்காக உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, "பாவங்களைச் செலுத்துகிற ஆத்மா" என்பது "பாவங்களைச் செய்பவர்" என்றும் "என் ஆத்துமா சோர்ந்துபோம்" என்றும் அர்த்தம், "நான் சோர்வாக இருக்கிறேன்."

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • " ஆத்துமா " என்ற வார்த்தையும் "உள்ளார்ந்த சுய" அல்லது "உள்ளார்ந்த நபர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • சில சந்தர்ப்பங்களில், "என் ஆத்துமா" "நான்" அல்லது "என்னை" என்று மொழிபெயர்க்கலாம்.
  • பொதுவாக " ஆத்துமா " என்ற சொற்றொடரை "நபர்" அல்லது "அவர்" அல்லது "அவரை" என மொழிபெயர்க்கலாம்.
  • சில மொழிகள், "ஆத்மா" மற்றும் "ஆவி" ஆகியவற்றிற்கான ஒரு வார்த்தையை மட்டுமே கொண்டிருக்கக்கூடும்.
  • எபிரெயர் 4:12-ல், "ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கும்" அடையாள அர்த்தம், "உள்ளுணர்வை ஆழமாக அறிந்துகொள்ளுதல் அல்லது வெளிப்படுத்துதல்" என்பதாகும்.

(மேலும் காண்க: ஆவி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5082, H5315, H5397, G5590