ta_tw/bible/kt/sabbath.md

4.9 KiB

ஓய்வுநாள்

வரையறை:

வாரத்தின் ஏழாம் நாளையே " ஓய்வுநாள் " என்ற வார்த்தை குறிக்கிறது; இது இஸ்ரவேலருக்கு ஒரு ஓய்வு நாளாக அமைந்து, வேலை செய்யாதபடி தேவன் கட்டளையிட்டார்.

  • ஆறு நாட்களில் தேவன் உலகத்தை உண்டாக்கியபின், ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார். அதேவிதமாக, ஏழாம் நாளில் ஒருநாள் விசேஷ நாளாக அதை ஒதுக்கும்படி தேவன் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார்.
  • "ஓய்வுநாளைப் பரிசுத்தமாக கடைபிடிக்க" கட்டளை, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசேக்குக் கற்பித்த தேவன் எழுதிய பத்து கட்டளைகளில் ஒன்றாகும்.
  • யூத நாட்களை எண்ணி, ஓய்வுநாள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை மாலை வரை நீடிக்கும்.
  • சிலசமயங்களில் ஓய்வுநாளைக் காட்டிலும் "சப்பாத் நாள்" என அழைக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இது "ஓய்வு நாள்" அல்லது "ஓய்வுக்கான நாள்" அல்லது "வேலை செய்யாத நாள்" அல்லது "தேவனின் ஓய்வு நாள்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • சில மொழிபெயர்ப்புகள், "சப்பாத் தினம்" அல்லது "ஓய்வு நாள்" போன்றே, ஒரு சிறப்பு நாளாகும் என்பதைக் காட்டுவதற்கு இந்த வார்த்தையை உதவுகின்றன.
  • இந்த வார்த்தை உள்ளூர் அல்லது தேசிய மொழியில் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள்.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

(மேலும் காண்க: ஒய்வு)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 13:5 "எப்பொழுதும் __ ஓய்வு நாள் __ பரிசுத்தமாக வைக்க வேண்டும். ஆறுநாளைக்கு நீ உன் வேலையைச் செய்; நீ ஏழாம் நாளிலே ஓய்வெடுத்து, என்னை மகிமைப்படுத்து.
  • 26:2 இயேசு தன் குழந்தை பருவத்தில் வாழ்ந்த நாசரேத் நகரத்திற்குச் சென்றார். __ ஓய்வு நாளில்_, அவர் வழிபாட்டு இடத்திற்கு சென்றார்.
  • 41:3 இயேசு புதைக்கப்பட்ட நாள் __ ஓய்வு நாள் __, யூதர்கள் அந்நாளில் கல்லறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை

சொல் தரவு:

  • Strong's: H4868, H7676, H7677, G4315, G4521