ta_tw/bible/kt/name.md

5.0 KiB

பெயர், பெயர்கள், பெயரிடப்பட்ட

வரையறை:

வேதாகமத்தில், "பெயர்" என்ற வார்த்தை பல உருவக அர்த்தமுள்ள வழிகளில் பயன்படுத்தப்பட்டது.

  • சில சந்தர்ப்பங்களில், "பெயர்" ஒரு நபரின் நற்பெயரைக் குறிக்கலாம்,உதாரணமாக, "நம்மை ஒரு பெயரை உருவாக்குவோம்." என்ற சொற்றொடரில் உள்ளது போல.
  • "பெயர்" என்பது ஏதோவொரு நினைவகத்தை குறிக்கலாம். உதாரணமாக, "விக்கிரகங்களின் பெயர்களைத் துண்டித்து" என்பது அந்த சிலைகளை அழிப்பதற்காக அதாவது இனி அவர்கள் நினைவில் வைக்கவோ அல்லது வணங்கவோ கூடாது என்று அர்த்தம்.
  • "தேவனுடைய நாமத்தில்" பேசுவது அவருடைய வல்லமையும் அதிகாரமும், அல்லது அவருடைய பிரதிநிதி என்று பேசியது.

யாராவது ஒருவரின் "பெயர்" முழு மனிதரைக் குறிக்கலாம், "நாம் இரட்சிக்கப்பட வேண்டிய பரலோகத்தின் கீழ் வேறு பெயர் இல்லை". (பார்க்கவும்: ஒலிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "நல்ல பெயர்" போன்ற ஒரு சொற்றொடரை "அவருடைய நன்மதிப்பு" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "பெயரில்" ஏதேனும் ஒன்றைச் செய்வது" என்பது அந்த அதிகாரியின்" அல்லது "அனுமதியுடன்" அல்லது "அந்த நபரின் பிரதிநிதி" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "நமக்கு ஒரு பெயரை ஏற்ப்படுத்துவோம்" என்ற சொற்றொடரை "பலர் நம்மைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்" அல்லது "நாம் மிகவும் முக்கியமானவர்களாக எண்ணுகிறோம்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "அவருடைய பெயரை அழைப்பது" என்ற சொற்றொடரை "அவரைப் பெயரிடு" அல்லது "அவருக்கு பெயரைக் கொடுங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள்" என்பது "உன்னை நேசிக்கிறவர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "சிலைகளின் பெயர்களை நீக்குவாது" என்ற சொற்றொடரை "புறமத விக்கிரகங்களை நினைக்காதபடிக்கு" அல்லது "பொய்க் கடவுட்களை வழிபடுவதை நிறுத்துவதற்கு" அல்லது "அனைத்து சிலைகளையும் முழுமையாக அழிக்க வேண்டும், அவர்களைப் பற்றி சிந்திக்கவும் கூடாது. " என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: கூப்பிடு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5344, H7121, H7761, H8034, H8036, G2564, G3686, G3687, G5122