ta_tw/bible/kt/ephod.md

2.7 KiB

ஏபோத்

வரையறை:

ஒரு ஏபோத் என்பது இஸ்ரவேலின் ஆசாரியரால் அணியப்பட்ட அங்கி போன்ற ஆடையாக இருந்தது. அது இரண்டு பகுதிகளை அதாவது முன் மற்றும் பின்புறம் பகுதிகளைக் கொண்டிருந்தது, அவை தோள்களில் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன மற்றும் ஒரு துணி கச்சையைக் கொண்டு இடுப்பை சுற்றி இணைக்கப்பட்டன.

ஒரு வகையான ஏபோத் சாதாரண சணலால் செய்யப்பட்டது, அவை சாதாரண ஆசாரியர்களால் அணியப்பட்டிருந்திருந்தது.

  • பிரதான ஆசாரியரால் அணியப்பட்ட ஏபோத் சிறப்பாக தங்கம், நீலம், ஊதா, சிவப்பு நூல் ஆகியவற்றைக் கொண்டது.
  • பிரதான ஆசாரியரின் மார்பதக்கம் ஏபோத்தின் முன்புறத்துடன் இணைத்திருந்தது. மார்பதக்கத்தின் பின்பகுதியில் தேவனிடம் சில குறிப்பிட்ட விஷயங்களில் அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ள பயன்பட்ட ஊரிம், தும்மிம் என்ற கற்கள் இருந்தன.
  • நியாயாதிபதி கிதியோன் முட்டாள்தனமாக தங்கத்தினால் ஒரு ஏபோத்தை உண்டாக்கினான், அதை இஸ்ரவேல் மக்கள் ஒரு விக்கிரகமாக வணங்கினர்.

(மேலும் காண்க: ஆசாரியன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H641, H642, H646