ta_tw/bible/kt/curse.md

6.3 KiB

சாபம், சபிக்கப்பட்ட, சாபங்கள், சபித்தல்

வரையறை:

"சாபம்" என்ற வார்த்தை, எதிர்மறையான காரியங்கள் சபித்துள்ள நபருக்கு அல்லது காரியத்திற்காக நடக்கும் என்பதாகும்.

  • ஒரு சாபம் ஒரு நபருக்கு அல்லது ஏதோ ஒரு காரியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு அறிக்கையாக இருக்கலாம்.
  • யாரையாவது சபிப்பது என்பது கெட்ட காரியங்கள் அவர்களுக்கு நேரிடும் என்ற விருப்பத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
  • ஒரு நபர் மற்றொருவருக்கு ஏற்படக்கூடிய தண்டனை அல்லது பிற எதிர்மறை விஷயங்களையும் இது குறிக்கலாம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தையானது "கெட்ட காரியங்களை நடக்கும்படி செய்வது" அல்லது "மோசமான ஏதோ நடக்கும்" என்று அறிவிப்பது” அல்லது "தீய காரியங்களை நடக்கும்படி சத்தியம் செய்வது" என்று மொழிபெயர்க்கலாம்.
  • கீழ்ப்படியாத மக்களுக்கு தேவன் சாபத்தை அனுப்பியதன் பின்னணியில், "கெட்ட காரியங்களை நிகழும்படி செய்து, தண்டிப்பது" என அது மொழிபெயர்க்கப்படலாம்.
  • "சபிக்கப்பட்ட” என்ற வார்த்தையை மக்களைக் குறிப்பதற்காகவிவரிக்க பயன்படுத்தப்படும் போது ", "(இந்த நபர்) மிகவும் சிரமங்களை அனுபவிப்பார். என்று மொழிபெயர்க்கலாம்."
  • "சபிக்கப்படட்டும்" என்ற சொற்றொடரை, (இந்த நபர்) பெரும் கஷ்டங்களை அனுபவிக்கட்டும்" என மொழிபெயர்க்கலாம்.
  • "சபிக்கப்பட்ட நிலம்” என்ற சொற்றொடரை, "மண் மிகவும் வளமானதாக இருக்கமுடியாது. என மொழிபெயர்க்க முடியும்,"
  • "நான் பிறக்கிற நாளிலே சபிக்கப்பட்டேன்" என்பதை, "நான் மிகவும் பரிதாபமாக இருக்கிறேன், அது பிறக்காமலிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • எனினும், இலக்கு மொழியில் "சபிக்கப்பட்ட" என்ற சொற்றொடர் அதே பொருள் கொண்டதாக இருந்தால், அதே சொற்றொடரை வைத்துகொள்வது நல்லது.

(மேலும் காண்க: ஆசீர்வதி)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 2:9 தேவன் பாம்பைப் பார்த்து, "நீ சபிக்கப்பட்டிருக்கிறாய் என்று சொன்னார்.!"
  • 2:11"இப்போது நிலமானது சபிக்கப்பட்டதாகும், நீங்கள் உணவிற்காக கடினமாக உழைக்க வேண்டும்."
  • 4:4 "உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன்,உன்னை சபிக்கிறவர்களை சபிப்பேன் ."
  • 39:7 அப்பொழுது பேதுரு, "இந்த மனிதனை நான் அறிந்தால் தேவனே என்னை சபிக்கட்டும்" என்று சத்தியம் செய்தான்.
  • 50:16 ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல், இவ்வுலகிற்குள் பாவத்தை கொண்டு வந்ததால், தேவன் அதை சபித்து, அதை அழிக்க முடிவு செய்தார்.

சொல் தரவு:

  • Strong's: H422, H423, H779, H1288, H2763, H2764, H3994, H5344, H6895, H7043, H7045, H7621, H8381, G331, G332, G685, G1944, G2551, G2652, G2653, G2671, G2672, G6035