ta_tw/bible/kt/bless.md

8.3 KiB

ஆசீர்வதி, ஆசீர்வதிக்கப்பட்ட, ஆசீர்வாதம்

வரையறை:

ஒருவரை அல்லது ஒன்றை ஆசீர்வதிப்பது என்பது நன்மையான காரியங்கள் அல்லது பயனுள்ள காரியங்கள் ஆசீர்வதிக்கப்படும்போது நேரிடும் என்ற நோக்கத்துடன் செய்யும் ஒரு காரியம் ஆகும். ".

  • ஒருவரை ஆசீர்வதிப்பது, அந்த நபருக்கு நேர்மறையான மற்றும் நன்மை பயக்கும் காரியங்களுக்கு விருப்பம் தெரிவிப்பதாகும்.
  • வேதாகமக் காலங்களில், ஒரு தகப்பன் தனது பிள்ளைகள் மீது முறையாக ஆசீர்வாதத்தை அடிக்கடி உச்சரிப்பார்.
  • மக்கள் தேவனை 'ஆசிர்வதிக்க' அல்லது தேவன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தும்போது, அது ​​அவர்கள் அவரை புகழ்கிறார்கள் என்று பொருள்.
  • "ஆசீர்வாதம்" என்ற வார்த்தை சில நேரங்களில் சாப்பிடுவதற்கு முன்பே உணவைப் பரிசுத்தப்படுத்த பயன்படுத்தப்படுகிறது அல்லது உணவுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும் பாராட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "ஆசீர்வதிக்க" என்ற வார்த்தை, "நிறைவாகக் கொடுத்தல்" அல்லது "மிகுந்த தயவாகவும், சாதகமானதாகவும் இருக்க வேண்டும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • "தேவன் பல நல்ல காரியங்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை" "தேவன் மிகுதியாக அருளினார்" அல்லது "தேவன் பல நல்ல காரியங்களை நடக்கும்படி செய்வார்" என மொழிபெயர்க்கப்படலாம் "
  • "அவர் ஆசீர்வதிக்கப்படுகிறார்" என்பதை "அவர் பெரிதும் பயனடைவார்" அல்லது "அவர் நல்ல விஷயங்களை அனுபவிப்பார்" அல்லது "தேவன் அவரை செழிப்படையச் செய்வார்." என மொழிபெயர்க்கலாம்
  • "ஆசீர்வதிக்கப்பட்டவர் யாரென்றால்" என்பதை "அந்த நபர் எவ்வளவு நல்லவர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" போன்ற சொற்றொடர்கள் "கர்த்தர் துதிக்கப்படுவாராக" அல்லது "கர்த்தரைத் துதியுங்கள்" அல்லது "நான் கர்த்தரைத் துதிக்கிறேன்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • உணவை ஆசீர்வதிக்கும் பின்னணியில், "உணவுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துவது" அல்லது "அவர்களுக்கு உணவளிப்பதற்காக தேவனைப் புகழ்வது" அல்லது "தேவனைத் துதிக்கிறதினால் உணவைப் பரிசுத்தமாக்குவது" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: துதி)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 1:7 தேவன் அதை நல்லது என்று கண்டார். மேலும் அவர்களை ஆசீர்வதித்தார்.
  • 1:15 தேவன் ஆதாமும் ஏவாளையும் தனது சொந்த சாயலில் உருவாக்கினார். அவர் அவர்களை ஆசீர்வதித்து, "பல குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் பெற்று பூமியை நிரப்புங்கள் என்று அவர்களிடம் கூறினார் ."
  • 1:16 எனவே தேவன்செய்து கொண்டிருந்த எல்லாவற்றிலிருந்தும் ஓய்ந்திருந்தார். அவர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததால் அந்த நாளை பரிசுத்தமாக்கி, அதை ஆசீர்வதித்தார்.
  • 4:4 "நான் உன் பெயரை பெருமைப்படுத்துகிறேன். உன்னை யார்__ஆசீர்வதிக்கிறார்களோ__ அவர்களை ஆசீர்வதிப்பேன் நீங்கள் யாரை சபிக்கிறீர்களோ அவர்களைச் சபிப்பேன்.. பூமியில் உள்ள அனைத்து குடும்பங்களும் உன்னிமித்தம் ஆசீர்வதிக்கப்படும். "
  • 4:7 மெல்கிசெதேக் ஆபிரகாமை ஆசீர்வதித்து "தேவன் பரலோகம் மற்றும் பூமியை சொந்தமாகக் கொண்டிருக்கிறவர் ஆபிராமை ஆசீர்வதிப்பாராக. என்று கூறினார்"
  • 7:3 ஈசாக்கு ஏசாவுக்கு தனது ஆசீர்வாதத்தை கொடுக்க விரும்பினான்.
  • 8:5 சிறையில் இருந்தபோதே, யோசேப்பு தேவனுக்கு உண்மையாக இருந்தார், தேவன் அவரை ஆசீர்வதித்தார்.

சொல் தரவு:

  • Strong's: H833, H835, H1288, H1289, H1293, G1757, G2127, G2128, G2129, G3106, G3107, G3108, G6050