ta_tw/bible/kt/confess.md

4.5 KiB

ஒப்புக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளப்பட்ட, ஒப்புக்கொள்கிறான், அறிக்கை செய்தல்

வரையறை:

முடிவெடுப்பது அல்லது ஒப்புக்கொள்வது என்பது ஒரு காரியம் உண்மைதான் என்று அறிக்கை செய்வதாகும். ஒரு "ஒப்புதல் வாக்குமூலம்" என்பது ஒரு காரியம் உண்மை என்று அறிக்கை செய்தல் அல்லது ஒப்புதல்கொடுப்பதாகும்.

  • "அறிக்கையிடு" என்ற வார்த்தை தேவனைப் பற்றி தைரியமாக குறிப்பிடுவதைக் குறிக்கலாம். நாம் பாவம் செய்ததை ஒப்புக்கொள்வதையும் இது குறிக்கலாம்.
  • மக்கள் தங்கள் பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்தால், அவர் அவர்களுக்கு மன்னிப்பார் என்று வேதாகமம் கூறுகிறது.
  • விசுவாசிகள் தங்கள் பாவங்களை ஒருவருக்கொருவர் ஒப்புக்கொள்கையில், இது ஆவிக்குரிய சுகப்படுத்துதலை ஏற்படுத்தும் என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு தன்னுடைய கடிதத்தில் எழுதினார்.
  • அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதும்போது ஒருநாள், அனைவருமே இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடுவார் அல்லது ஒப்புக்கொள்வார்கள் என்று கூறினார்.
  • இயேசுவே ஆண்டவர் என்றும் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று நம்பி மக்கள் அறிக்கை செய்தால், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று பவுலும் கூறினார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழ்நிலையை பொறுத்து, "ஒப்புதல்" என்பதை மொழிபெயர்க்கும் வழிகள், "ஒப்புக்கொள்" அல்லது "சாட்சிசொல்லுங்கள்" அல்லது "அறிவி" அல்லது "ஒப்புக்கொள்" அல்லது "உறுதிப்படுத்துதல்" ஆகியவை அடங்கும்.
  • "அறிக்கை செய்தலை" மொழிபெயர்ப்பதற்கான வெவ்வேறு வழிகள், "அறிவிப்பு" அல்லது "சாட்சியங்கள்" அல்லது நாம் நம்புவதைப் பற்றிய அறிக்கை" அல்லது "பாவத்தை ஒப்புக்கொள்வது" என்று இருக்கலாம்.

(மேலும் காண்க: விசுவாசம், சாட்சியம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3034, H8426, G1843, G3670, G3671