ta_tw/bible/kt/circumcise.md

11 KiB

விருத்தசேதனம் செய், விருத்தசேதனம் பண்ணப்பட்ட, விருத்தசேதனம் இல்லாத, விருத்தசேதனம் செய்யப்படாத

வரையறை:

"விருத்தசேதனம்" என்ற வார்த்தை ஒரு மனிதன் அல்லது ஆண் குழந்தையின் நுனிப்பகுதியை வெட்டுவதாகும். ஒரு விருத்தசேதன விழா இது தொடர்பாக செய்யப்படலாம்.

  • தேவன் தம்முடைய உடன்படிக்கைக்கு அடையாளமாக, தம் குடும்பத்தினரிலும், வேலையாட்களிலும் ஒவ்வொரு ஆண்பிள்ளைக்கும் விருத்தசேதனம் செய்யும்படி தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டார்.
  • ஆபிரகாமின் சந்ததியாரும் தம் குடும்பத்தாருக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இதைச் செய்யும்படி தேவன் கட்டளையிட்டார்.
  • "இருதயத்தின் விருத்தசேதனம்" என்ற சொற்றொடர், உருவகமாக ஒரு நபரிடமிருந்து "வெட்டுதல்" அல்லது பாவத்தை அகற்றுவதை குறிக்கிறது.
  • ஆவிக்குரிய விதத்தில், "விருத்தசேதனம் செய்யப்பட்டவர் என்பவர்" இயேசுவின் இரத்தம் மூலம் பாவம் நீங்க சுத்திகரிக்கப்பட்டு மற்றும் அவருடைய மக்களாக மாறுவதைக் குறிக்கிறது..
  • "விருத்தசேதனமில்லாதவர்" என்ற வார்த்தையானது சரீரப்பிரகாரமாக ஒரு நபர் விருத்தசேதனம் செய்யப்படாமல் இருப்பதைக் குறிக்கிறது. இது ஆவிக்குரிய விருத்தசேதனம் செய்யப்படாதவர்களையும், தேவனுடன் ஒரு உறவைப் பெறாதவர்களையும் உருவகப்பூர்வமாக குறிக்கலாம்.

"விருத்தசேதனம் செய்யப்படாத" மற்றும் "விருத்தசேதனம் இல்லாத" என்ற சொற்கள் உடலளவில் விருத்தசேதனம் செய்யப்படாத ஓர் ஆண் நபரைக் குறிக்கின்றன. இந்த சொற்களும் உருவகமாக பயன்படுத்தப்படுகின்றன.

  • எகிப்தும் விருத்தசேதனம் செய்ய வேண்டிய ஒரு தேசமாக இருந்தது. ஆகையால் எகிப்தில் "விருத்தசேதனமில்லாதவர்களால்" தோற்கடிக்கப்பட்டதாக தேவன் பேசும்போது, ​​எகிப்தியர்கள் விருத்தசேதனம் செய்யாததற்காக வெறுக்கப்கிறவர்களை அவர் குறிப்பிடுகிறார்.

  • "விருத்தசேதனமில்லாத இருதயமுள்ளவர்கள்" அல்லது "இருதயத்தில் விருத்தசேதனமில்லாதவர்கள்" ஆகியோரை வேதாகமம் குறிப்பிடுகிறது. இந்த மக்கள் தேவனுடைய மக்களாக இல்லை என்றும், அவருக்கு கீழ்ப்படியாத மனக்கடினமுள்ளவர்கள் என்றும் உருவகமாக சொல்லப்படுவதின் வழியாகும்.

  • விருத்தசேதனம் என்ற வார்த்தை மொழியில் பயன்படுத்தப்படுமாயின், "விருத்தசேதனம் இல்லாததவர் "என்பதை "விருத்தசேதனம் செய்யப்படாதவர்" என மொழிபெயர்க்கப்படலாம்.

  • "விருத்தசேதனம் இல்லாதவர்" என்ற வார்த்தையை "விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள்" அல்லது "தேவனுக்குச் சொந்தமல்லாதவர்கள்" என மொழிபெயர்க்கலாம்.

  • இந்த வார்த்தையின் உருவகத்தை மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள் "தேவனுடைய மக்கள் அல்ல" அல்லது "தேவனுக்குச் சொந்தமில்லாதவர்களைப் போல் கலகம்செய்பவர்கள்" அல்லது "தேவனுக்குச் சொந்தமான அடையாளம் இல்லாதவர்கள்" ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

  • "இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்படாத" என்ற வார்த்தையை "பிடிவாதமாக கலகத்தனமாக" அல்லது "விசுவாசிக்க மறுத்தல்" என மொழிபெயர்க்கப்படலாம். ஆனாலும், ஆவிக்குரிய விருத்தசேதனம் ஒரு முக்கியமான கருத்து என்பதால் வெளிப்வெளிப்பாட்டை அல்லது இதேபோன்ற ஒன்றை வைத்திருப்பது சிறந்தது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இலக்கு மொழியின் பண்பாடு ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யும்போது, ​​இதை குறிக்கும் சொல் இந்த காலத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள், "சுற்றி வெட்டு" அல்லது "ஒரு வட்டத்தில் வெட்டு" அல்லது "நுனித்தோலை வெட்டிவிடுதல் ஆகியனவாக இருக்கலாம்."
  • விருத்தசேதனம் என்பதை அறியாத கலாச்சாரங்களில், அடிக்குறிப்பிலோ அல்லது சொற்களின் தொகுப்பிலோ அதை விளக்க வேண்டிய அவசியம் இருக்கலாம்.
  • இதை மொழிபெயர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் வார்த்தை பெண்களைக் குறிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். "ஆண்" என்ற அர்த்தத்தை உள்ளடக்கிய ஒரு வார்த்தை அல்லது சொற்றொடருடன் இது மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியம்.

(மேலும் காண்க: தெரியாதவைகளை மொழிபெயர் ப்பது எப்படி

(மேலும் காண்க: ஆபிரகாம், உடன்படிக்கை)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 5:3 "உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆணுக்கும் விருத்தசேதனம் செய்வாயாக.
  • 5:5 அன்றைய தினம் ஆபிரகாம் தனது வீட்டிலுள்ள அனைத்து ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்தார்.

சொல் தரவு:

  • Strong's: H4135, H4139, H5243, H6188, H6189, H6190, G203, G564, G1986, G4059, G4061