ta_tw/bible/kt/blasphemy.md

3.9 KiB

தேவதூஷணம், தேவதூஷணம்சொல், தேவதூஷணம் கூறப்பட்ட, தேவதூஷணம் கூறுகிறவன், தேவதூஷணங்கள்

வரையறை:

வேதாகமத்தில் "தேவதூஷணம்" என்ற வார்த்தை தேவனுக்கோ அல்லது மக்களுக்கோ ஆழ்ந்த அவமதிப்பைக் காட்டுகிற விதத்தில் பேசுவதைக் குறிக்கிறது. யாரையாவது தூஷணமாக பேசுதல் என்பது, மற்றவர்கள் ஒரு நபரைப் பற்றி தவறாகவோ கெட்டவராகவோ நினைக்குமாறு அவரைப் பற்றி பேசுதல் ஆகும்.

  • பெரும்பாலும், தேவனை தேவதூஷணபேசுவது என்பது, அவரைப் பற்றி உண்மையாக இல்லாத விஷயங்களையோ அல்லது அவமதிப்பது போல ஒரு ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதன் மூலமோ அவரை அவதூறாக அல்லது அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பேசுவதாகும்.
  • ஒரு மனிதன் தன்னைக் கடவுள் என்று கூறிக்கொள்வதும் அல்லது உண்மையான ஒரே தேவனைத் தவிர வேறு ஒரு கடவுள் இருப்பதாகக் கூறுவதும் தேவதூஷணம் ஆகும்.
  • சில ஆங்கில பதிப்புகள் மக்களை தூஷணமாகக் குறிக்கும் போது இந்த வார்த்தையை "அவமதிப்பு" மொழிபெயர்க்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "தூஷணம்கூறுதல் "என்பது "தீய காரியங்களைச் சொல்வது" அல்லது "தேவனை அவமானப்படுத்துவது" அல்லது "அவதூறு" செய்வது என்று மொழிபெயர்க்கலாம்.
  • "தூஷணத்தை" மொழிபெயர்ப்பதற்கான வழிகள் "மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது" அல்லது "அவதூறு" அல்லது "தவறான வதந்திகளை பரப்புதல்" ஆகியவை அடங்கும்.

(மேலும் காண்க: அவமதிப்பு, அவதூறு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1288, H1442, H2778, H5006, H5007, H5344, G987, G988, G989