ta_tw/bible/kt/beloved.md

3.5 KiB

அன்புக்குரியவர்

வரையறை:

"அன்புக்குரியவர்" என்ற வார்த்தை அன்பின் வெளிப்பாடு ஆகும், அது யாரோ ஒருவரை நேசிப்பவர் மற்றும் அன்பிற்குரியவர் என்று விவரிப்பதாகும்.

  • "அன்புக்குரியவர்" என்ற வார்த்தையின் பொருள் "நேசத்திற்குரியவர்" அல்லது " நேசிக்கப்படுபவர்" என்பதாகும்.
  • தேவன் இயேசுவை "தம் அன்பிற்குரிய மகன்" என்று குறிப்பிடுகிறார்.
  • கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதிய கடிதங்களில், அப்போஸ்தலர்கள் தங்கள் சக விசுவாசிகளை "பிரியமானவர்களாக" அடிக்கடி குறிப்பிடுகிறார்கள்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தையை "அன்பிற்குரிய" அல்லது "நேசத்திற்குரியவர்" அல்லது மிகவும் "நேசிக்கப்படுகிறவர்," அல்லது "மிகவும் அன்பிற்குரியவர். என்று மொழிபெயர்க்கலாம்"
  • ஒரு நெருங்கிய நண்பர் பற்றி பேசுவதன் பின்னணியில், இது "என் அன்பான நண்பர்" அல்லது "என் நெருங்கிய நண்பர்" என மொழிபெயர்க்கப்படலாம். ஆங்கிலத்தில் "என்னுடைய அன்பான நண்பர், பவுல்" அல்லது "பவுல், என் அன்பான நண்பன்" என்று பொதுவாகச் சொல்லலாம். மற்ற மொழிகளில் இதை வேறு விதமாக இயற்கையானதாகக் கூற இயலும்.
  • அன்புள்ள “வார்த்தையானது, நிபந்தனையற்ற, தன்னலமற்ற, தியாகம் நிறைந்த தேவனுடைய அன்பின் வார்த்தையில் இருந்து வருகிறது என்பதைக் கவனியுங்கள்.

(மேலும் காண்க: அன்பு)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H157, H1730, H2532, H3033, H3039, H4261, G25, G27, G5207