ta_tw/bible/kt/adoption.md

4.1 KiB

குழந்தையை தத்தெடுத்தல், தத்தெடு, தத்தெடுக்கப்பட்டது

விளக்கங்கள்:

“தத்தெடு” “தத்தெடுத்தல்” என்பது சரீர உறவில்லாத ஒரு பெற்றோர் மற்றொருவர் குழந்தையை சட்டபூர்வமாக சொந்தமாக்கிக்கொள்ள நடத்தும் ஒரு தொடர் நிகழ்வு.

வேதம் “தத்தெடுத்தல்” “தத்தெடு” என்பதை உருப்பொருளில் விளக்கவேண்டுமெனில் தேவன் அவருடைய பிள்ளைகளை தனது குடும்பத்தில் ஒருவராக இணைத்துகொண்டு, அவர்களை தனது சொந்த மகன்களாகவும், மகள்களாகவும் ஆக்கிகொள்வதாகும். தத்தெடுத்த குழந்தைகளைப் போல, தேவன் தம்முடைய விசுவாசிகளை சொந்த வாரிசாக ஆக்கிகொள்கிறார், அவர்களை அவருடைய மகன்களாகவும், மகள்களாகவும் ஏற்றுக்கொண்டு எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார்.

மொழிபெயர்புக்கான சிபாரிசுகள்:

இந்த வார்த்தையை பெற்றோர்-பிள்ளை என்ற உறவின் முறையோடு விவரிக்க பயன்படுத்தும் வார்த்தையை பயன்படுத்தலாம். இதை உருவகம் அல்லது ஆவிக்குரிய அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும் “மகனாக தத்தெடுத்த அனுபவம்” என்ற வாக்கியம் “தேவனால் அவருடைய குழந்தையாக தத்தெடுத்தல்” அல்லது “தேவனுடைய ஆவிக்குரிய குழந்தைகள்” என்றும் மொழிபெயர்க்கலாம். “மகனாக தத்தெடுக்க காத்திருத்தல்” என்பதை “தேவனுடைய பிள்ளையாக இணைத்துகொள்வதற்கு எதிர்நோக்கிக் கொண்டிருத்தல்” அல்லது “தேவன் குழந்தையாக மாறுவதற்கு எதிர்ப்பார்ப்போடு காத்திருத்தல் என்றும் மொழிபெயர்க்கலாம். “அவர்களை தத்தெடுத்தல்” என்ற வாக்கியத்தை “அவருடைய சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்” அல்லது “அவர்களை தனது சொந்த ஆவிக்குரிய பிள்ளையாக்கினார்” என்றும் மொழிபெயர்க்கலாம்..

(மேலும்பார்க்க: வாரிசு, உரிமை, ஆவி)

வேத குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G5206