ta_tw/bible/other/wisemen.md

27 lines
6.5 KiB
Markdown

# ஞானமுள்ள மனிதர்கள்
## உண்மைகள்:
வேதாகமத்தில், “ஞானமுள்ள மனிதர்கள்” என்ற சொற்றொடர் பொதுவாக, தேவனுக்கு சேவை செய்து, முட்டாள்தனமாக அல்லாமல் ஞானமாக செயல்படும் மனிதர்களைகுறிக்கிறது. மேலும் இது, இராஜாவின் அரண்மனையில் அசாதாரண அறிவுடனும், திறமைகளுடனும் சேவை செய்யும் மனிதர்களைக் குறிக்கும் சிறப்பான வார்த்தையாகவும் இருக்கிறது.
* “ஞானமுள்ள மனிதர்கள்” என்ற வார்த்தை சிலநேரங்களில் “கவனமுள்ள மனிதர்கள்” அல்லது “விவேகமுள்ள மனிதர்கள்” என்றும் குறிப்பிடப்படுகின்றன. தேவனுக்குப் பயப்படுகிறதினால் ஞானமாகவும், நீதியாகவும் செயல்படுகிற மனிதர்களைக் குறிக்கிறது.
* பார்வோன் மற்றும் மற்ற இராஜாக்களிடம் சேவை செய்த “ஞானமுள்ள மனிதர்கள்” பொதுவாக நட்சத்திரங்களைக் குறித்து கற்று, வானத்தில் நட்சத்திரங்களின் அமைப்புகளுக்கு விளக்கம் கொடுப்பவர்களாக இருந்தனர்.
* பொதுவாக ஞானமுள்ள மனிதர்கள், கனவுகளுக்கு அர்த்தம் சொல்லும்படி எதிர்பார்க்கப்பட்டனர். உதாரணமாக, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தனது ஞானமுள்ள மனிதர்களிடம் தனது கனவுகளைச் சொல்லி, அவைகளுக்கு அர்த்தம் சொல்லும்படி கட்டளையிட்டான். ஆனால், தேவனிடத்திலிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொண்ட தானிஎளைத் தவிர, அவர்களில் ஒருவனும்கனவிற்கு அர்த்தம் சொல்ல முடியவில்லை.
* சிலநேரங்களில் ஞானமுள்ள மனிதர்கள், அசுத்த ஆவிகளின் வல்லமையுடன் அற்புதங்களைச் செய்தல், குறிசொல்லுதல் போன்ற மந்திர வித்தைகளை நடப்பித்தார்கள்.
* புத்தி ஏற்பாட்டில், இயேசுவை ஆராதிப்பதற்காக கிழக்கிலிருந்து வந்த ஒரு குழுவினர் சாஸ்திரிகள் என்று அழைக்கப்பட்டனர். அதற்கு “ஞானமுள்ள மனிதர்கள்” என்று பொதுவாக மொழிபெயர்க்கப்படுகிறது இது கிழக்கு நாட்டில் ஆட்சியாளர்களுக்கு சேவைசெய்த அறிஞர்களைக் குறிப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
* அனேகமாக இந்த மனிதர்கள், நட்சத்திரங்களைக் குறித்துக் கற்ற வானசாஸ்திரிகள் ஆவர். அவர்கள், தானியேல் பாபிலோனிலிருந்த போது, அவனால் கற்பித்த ஞானமுள்ள மனிதர்களின் சந்ததிகளாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
* பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, “ஞானமுள்ள மனிதர்கள்” என்ற பதத்தை, “அறிவுள்ளவன்” அல்லது “திறமையுள்ள மனிதர்கள்” அல்லது “படித்த மனிதர்கள்” அல்லது ஆட்சியாளர்களிடம் முக்கியமான பதவியில் இருக்கும் மனிதர்களைக் குறிப்பிடும் வார்த்தை ஆகியவற்றைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கலாம்.
* “ஞானமுள்ள மனிதர்கள்” என்பது பெயர்ச்சொல் சொற்றொடராக இருந்தால், “அறிவுள்ளவன்” என்ற வார்த்தையை வேதாகமத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளபடியே மொழிபெயர்க்க வேண்டும்.
(மேலும் பார்க்க: [பாபிலோன்](../names/babylon.md), [தானியேல்](../names/daniel.md), [குரிசொல்லுதல்](../other/divination.md), [மந்திரம்](../other/magic.md), [நேபுகாத்நேச்சார்](../names/nebuchadnezzar.md), [ஆட்சியாளர்](../other/ruler.md), [அறிவுள்ளவன்](../kt/wise.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [1 நாளாகமம் 27:32-34](rc://ta/tn/help/1ch/27/32)
* [தானியேல் 2:1-2](rc://ta/tn/help/dan/02/01)
* [தானியேல் 2:10-11](rc://ta/tn/help/dan/02/10)
## சொல் தரவு:
* Strong's: H2445, H2450, H3778, H3779, G4680