ta_tw/bible/other/gate.md

4.2 KiB

நுழைவாயில், வாயில்கள், வாயில் கம்பிகள், வாயில் காப்போன், வாயில் நிலைக்கால்கள்கள், நுழைவாயில், நுழைவாயில்கள்

வரையறை:

ஒரு "வாயில்" என்பது ஒரு வீட்டை அல்லது நகரத்தைச் சுற்றியிருக்கும் வேலி அல்லது சுவரில் உள்ள நுழையும் பகுதியாகும். "கதவு பட்டை" என்பது ஒரு மர அல்லது உலோகப் பட்டையை குறிக்கிறது, அது வாயில் பூட்டுவதற்கு பயன்பட்டது.

  • நகரின் உள்ளேயும் வெளியேயும் மக்கள், விலங்குகள், சரக்குகள் ஆகியவற்றை பயணிக்க ஒரு நகரத்தின் வாயிலை திறக்கப்படும்.
  • நகரத்தைப் பாதுகாக்க, அதன் சுவர்கள் மற்றும் வாயில்கள் தடித்ததாகவும் மற்றும் வலுவானதாகவும் இருந்தன. நகரத்திற்குள் எதிரிகள் நுழையமுடியாதபடி அவர்களைத் தடுக்க வாயில்களை உலோகம் அல்லது மரத்தாலான பட்டையால் பூட்டப்பட்டது.
  • ஒரு நகரத்தின் வாயில்கள் பெரும்பாலும் ஒரு கிராமத்தின் செய்தி மற்றும் சமூக மையமாக இருந்தது. வியாபார பரிவர்த்தனைகள் நிகழ்ந்தன, தீர்ப்புகள் செய்யப்பட்டன, ஏனெனில் நகர சுவர்கள் சூடான வெயிலிலிருந்து குளிர் நிழலை உருவாக்கும் நுழைவாயில்களைக் கொண்டிருக்க போதுமான தடிமனாக இருந்தன. குடிமக்கள் தங்களது வியாபாரத்தை நடத்தவும் தங்கள் வழக்குகளை தீர்த்துக்கொள்ளவும் நிழலில் உட்கார்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழ்நிலையை பொறுத்து, "வாயில்" என்பதை மொழிபெயர்க்கும் மற்ற வழிகள் "கதவை" அல்லது "சுவர் திறப்பு" அல்லது "தடையாக" அல்லது "நுழைவாயில்" என்று இருக்கலாம்.
  • "வாயிலின் பட்டைகள்" என்ற சொற்றொடரை "வாயில்கள்" அல்லது "வாயில் பூட்டுவதற்கு மரத்தாலான தண்டுகள்" அல்லது "வாயிலின் உலோக பூட்டுத் தண்டுகள்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1817, H5592, H6607, H8179, H8651, G2374, G4439, G4440