ta_tw/bible/other/endure.md

4.4 KiB

சகிப்புத்தன்மை, சகிக்கிற, சகிப்புத்தன்மையுள்ள, நீடிக்கும்தன்மையுள்ள, பொறுமை

வரையறை:

காலப்போக்கில் "சகிப்புத்தன்மை" என்பது நீண்ட காலம் நீடிக்கும் அல்லது பொறுமையுடன் சகித்துக்கொள்வதைக் குறிக்கிறது.

  • சோதனைக் காலம் வரும்போது, சோர்வடையாமல் ​​உறுதியாய் நிற்பதைக் குறிக்கும்.
  • "சகிப்புத்தன்மை" என்ற வார்த்தை "பொறுமை" அல்லது "சோதனைக்கு உட்பட்டது" அல்லது "துன்புறுத்தப்படுகையில் விடாமுயற்சி" என்று அர்த்தம்.
  • 'கடைசிவரை சகித்திருக்கவேண்டும்' என்று கிறிஸ்தவர்களை உற்சாகப் படுத்துகிறது, இது அவர்கள் பாடுபடவேண்டியிருந்தாலும், இயேசுவுக்குக் கீழ்ப்படியும்படி சொல்கிறது.
  • "துன்பத்தைச் சகிப்பதது " என்பதை "துன்பத்தை அனுபவிக்க" அர்த்தப்படுத்தலாம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "சகிப்புத்தன்மை" என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கான வழிகள், "விடாமுயற்சியும்" அல்லது "தொடர்ந்து விசுவாசிக்கிற" அல்லது "நீங்கள் செய்ய விரும்புவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்" அல்லது "உறுதியுடன் நிற்கவும்" ஆகியவை அடங்கும்.
  • சில சந்தர்ப்பங்களில், "சகிப்புத்தன்மையுடன்" என்பதை "அனுபவம்" அல்லது "வழியாக செல்ல" என மொழிபெயர்க்கலாம்.
  • நீண்ட காலம் நீடிக்கும் என்ற அர்த்தத்தில், "சகிப்புத்தன்மை" என்பது "கடைசிவரை" அல்லது "தொடர்ந்து" என்று அழைக்கப்படலாம். "சகித்துக்கொள்ளாது" என்ற சொற்றொடரை "நீடிக்காது" அல்லது "தொடர முடியாது" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "சகிப்புத்தன்மையை" மொழிபெயர்ப்பதற்கான வழிகள், "விடாமுயற்சி" அல்லது "தொடர்ந்து விசுவாசித்தல்" அல்லது "உண்மையுள்ளவர்களாக நீடித்திருப்பது" ஆகியவை அடங்கும்.

(மேலும் காண்க: விடாமுயற்சி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H386, H3201, H3557, H3885, H5331, H5375, H5975, G430, G907, G1526, G2005, G2076, G2553, G2594, G3114, G3306, G4722, G5278, G5281, G5297, G5342