ta_tw/bible/other/dedicate.md

3.5 KiB

அர்ப்பணி, அர்ப்பணிக்கப்படுகிற, அர்ப்பணிக்கப்பட்ட, அர்ப்பணிப்பு

வரையறை:

ஒரு சிறந்த நோக்கத்திற்காகவோ அல்லது செயல்பாட்டிற்காகவோ ஒன்றை பிரித்தெடுப்பது அல்லது ஈடுபடுவதாகும்.

  • தாவீது தங்கத்தையும் வெள்ளியையும் கர்த்தருக்கு அர்ப்பணித்தார்.
  • பெரும்பாலும் "அர்ப்பணிப்பு" என்ற வார்த்தையானது, ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஏதாவது ஒன்றை தெரிவு செய்யும் ஒரு முறையான நிகழ்வு அல்லது விழாவைக் குறிக்கிறது.
  • பலிபீடத்தின் அர்ப்பணிப்பு என்பது தேவனுக்கு ஒரு பலியை செலுத்தும் காரியத்தை உள்ளடக்குகிறது.
  • எருசலேமின் பழுதுபார்க்கப்பட்ட அலங்கத்தை அர்ப்பணிப்பதில் இஸ்ரவேலரை வழிநடத்தியபோது, ​​நெகேமியா, ஆண்டவருக்கு மட்டுமே சேவை செய்வதற்கும், அவருடைய நகரத்தை கவனிப்பதற்கும் புதுப்பிக்கப்பட்ட வாக்குறுதியைக் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியானது இசைக்கருவிகள் வாசித்தல் மற்றும் பாடும் மூலம் தேவனுக்கு நன்றி செலுத்துவது ஆகியன உள்ளடக்கி இருந்தது.
  • "அர்ப்பணிப்பு" என்ற வார்த்தை "விசேஷமாக ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்டது" அல்லது "ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட வேண்டும்" அல்லது "ஒரு சிறப்பு பணிக்காக யாராவது ஒருவரை ஏற்படுத்துதல் வேண்டும்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: அர்ப்பணம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2596, H2597, H2598, H2764, H4394, H6942, H6944, G1456, G1457