ta_tw/bible/other/cherubim.md

5.6 KiB

கேரூப், கேருபீன், கேரூப்கள்

வரையறை:

" கேரூப் " என்ற வார்த்தையும் அதன் பன்மை வடிவமான "கேருபீன்கள்", தேவனால் உருவாக்கப்பட்ட ஒரு விசேஷ வகை பரலோக ஜீவனைக் குறிக்கிறது. கேருபீன்கள் இறக்கைகள் மற்றும் நெருப்பு போன்றவற்றை கொண்டுள்ளதாகவேதாகமம் விவரிக்கிறது.

  • கேருபீன்கள் தேவனின் மகிமையையும் வல்லமையையும் வெளிப்படுத்துகின்றன, மேலும் புனிதமான காரியங்களைப் பாதுகாப்பவர்களாகத் தோன்றுகின்றன.
  • ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு தேவன் ஏதேன் தோட்டத்தின் கிழக்குப் பக்கத்தில் சுடரொளிப் பட்டயத்துடன் உள்ள கேருபீன்களை நிறுத்தினார், இதனால் ஜீவ விருட்சத்தை மனிதர்கள் இனி நெருங்கவே முடியாது..
  • உடன்படிக்கைப் பெட்டியின் பிராயச்சித்த மூடியின் மேல் ஒன்றையொன்று நோக்கிக்கொண்டு, தங்கள் இரண்டு செட்டைகள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கும் வண்ணம் உள்ள இரண்டு கேருபீன்களை உருவாக்குவதற்கு தேவன் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார்.
  • கேருபீன்களின் உருவத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் திரைச்சீலைகளில் பொறிப்பதற்கும் அவர் அவர்களிடம் சொன்னார்.
  • சில பத்தியில், இந்த ஜீவன்கள் நான்கு முகங்களைக் கொண்டிருப்பதாக விவரிக்கப்படுகின்றன: ஒரு மனிதன், ஒரு சிங்கம், ஒரு காளை, ஒரு கழுகு.
  • சில நேரங்களில் தேவதூதர்கள் எனக் கருதப்படுகிறார்கள், ஆனால் பைபிள்வேதாகமம் இதை தெளிவாகக் குறிப்பிடுவதில்லை.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "கேருபீன்" என்ற வார்த்தை "இறக்கைகளுடன் உள்ள ஜீவன்கள்" அல்லது "இறக்கைகளுடன் உள்ள ஆவிக்குரிய பாதுகாவலர்கள்" அல்லது " "பரிசுத்தமான, இறக்கைப் பாதுகாவலர்கள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • ஒரு " கேருபீனின் ஒருமை நிலையில் கேரூப்என்று மொழிபெயர்க்க வேண்டும், உதாரணமாக, "இறக்கைகள் கொண்ட ஜீவன்" அல்லது " இறக்கைகள் கொண்ட ஆவிக்குரிய பாதுகாவலர்" என்பதில் உள்ளது போல ஒருமையில் இருக்க வேண்டும்.
  • இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு "தேவதூதன் என்ற வார்த்தையின்" மொழிபெயர்ப்பிலிருந்து வேறுபட்டது என்பதை உறுதிப்படுத்தவும்.
  • உள்ளூர் அல்லது தேசிய மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பில் இந்த வார்த்தை எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது அல்லது எழுதப்பட்டது என்பதைக் கவனியுங்கள். (பார்க்கவும்: தெரியாதவைகளை எப்படி மொழிபெயர்ப்பது

(மேலும் காண்க: தேவதூதன்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3742, G5502