ta_tw/bible/other/bury.md

4.2 KiB

அடக்கம் செய், அடக்கம் செய்கிற, அடக்கம் செய்யப்பட்ட, அடக்கம்செய்தல், அடக்கம்

வரையறை:

"அடக்கம்" என்ற வார்த்தை வழக்கமாக ஒரு இறந்த உடலை ஒரு குழி அல்லது மற்ற அடக்கம்செய்யப்படும் இடத்தில் வைப்பதை குறிக்கிறது. "அடக்கம்" என்ற வார்த்தை ஒன்று புதைக்கப்படும் செயல் அல்லது ஏதேனும் புதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இடத்தை விவரிக்க பயன்படுத்தலாம்.

  • பெரும்பாலும் மக்கள் இறந்த உடலை தரையில் ஆழமான குழிக்குள் வைத்து, மண்ணினால் மூடுவதன் மூலம் புதைக்கிறார்கள்.
  • சில நேரங்களில் இறந்த உடல் சவப்பெட்டி போன்ற ஒரு பெட்டியில் போன்ற அமைப்பிற்குள், அதை புதைப்பதற்கு முன் வைக்கப்படுகிறது.
  • வேதாகமக் காலங்களில், இறந்தவர்கள் குகை அல்லது அதுபோன்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். இயேசு இறந்த பிறகு, அவரது உடல் துணியால் மூடப்பட்டிருந்ததுடன், முத்திரையிடப்பட்ட ஒரு கல் உள்ள பெரிய கல்லறையில் வைக்கப்பட்டது.
  • "அடக்கம் செய்யப்படும் இடம்" அல்லது "கல்லறை " அல்லது "கல்லறை அறை" அல்லது "அடக்க குகை" என்பது ஒரு இறந்த உடலை புதைக்கின்ற ஒரு இடத்தைக் குறிக்க எல்லா வழிகளும் ஆகும்.
  • ஆகான் எரிகோவில் இருந்து தான் திருடிய வெள்ளியையும் மற்ற பொருட்களையும் புதைத்ததுபோல மற்ற பொருட்களும் புதைக்கப்படலாம்.
  • "அவருடைய முகத்தை புதைத்து" என்ற வார்த்தை பொதுவாக "அவருடைய கைகளால் தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டது" என்பதாகும்.
  • சில சமயங்களில், "மறைத்து" என்ற வார்த்தையை ஆகான், எரிகோவில் இருந்து திருடப்பட்டவைகளை நிலத்தில் மறைத்ததுபோல "புதைக்க" என்று அர்த்தம் கொள்ளலாம். இது அவன் நிலத்தில் புதைத்தான் என்று பொருள்.

(மேலும் காண்க: எரிகோ, கல்லறை)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6900, H6912, H6913, G1779, G1780, G2290, G4916, G5027