ta_tw/bible/other/biblicaltimewatch.md

23 lines
2.6 KiB
Markdown

# ஜாமம் (வேதாகம நேரம்), ஜாமங்கள்
## வரையறை:
வேதாகமக் காலங்களில், ஒரு "ஜாமம்" என்பது இரவு நேரத்தில் ஒரு காவலாளர் அல்லது ஒரு நகரத்திற்கு காவலாளி ஒரு எதிரியிடமிருந்து எந்த ஆபத்துக்காகவும் காத்திருக்க வேண்டிய காலமாகும்.
* பழைய ஏற்பாட்டில், இஸ்ரவேல் மக்களுக்கு "ஆரம்பம்" (சூரியன் மறையும் நேரத்திலிருந்து இரவு10 மணி வரை), "நடுஇரவு" (இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை), "காலை" (அதிகாலை 2 மணிநேரம் முதல் சூரிய உதயம் வரை) என்று மூன்று ஜாமங்கள் இருந்தன.
* புதிய ஏற்பாட்டில், யூதர்கள் ரோமானிய முறையை பின்பற்றி, "முதல் ஜாமம்" (சூரியன் மறையும் நேரத்திலிருந்து இரவு 9 மணி வரை), "இரண்டாவது ஜாமம்" (இரவு 9 முதல் 12 வரை), "மூன்றாம் ஜாமம்" (நள்ளிரவு 12 முதல் அதிகாலை3 மணி வரை) , மற்றும் "நான்காவது" (அதிகாலை 3 மணியிலிருந்து சூரிய உதயம் வரை) நான்கு ஜாமங்கள் இருந்தன.
* இவை "பிந்தைய மாலை"வேளை அல்லது "இரவின் நடுப்பகுதி" அல்லது " அதிகாலை இருட்டோடு" என்று பொதுவான வெளிப்பாடுகளுடன் மொழிபெயர்க்கப்படும்.
(மேலும் காண்க: [ஜாமம்](../other/watch.md))
## வேதாகமக் குறிப்புகள்:
* [லூக்கா 12:37-38](rc://ta/tn/help/luk/12/37)
* [மாற்கு 6:48-50](rc://ta/tn/help/mrk/06/48)
* [மத்தேயு 14:25-27](rc://ta/tn/help/mat/14/25)
* [சங்கீதம் 90:3-4](rc://ta/tn/help/psa/090/003)
## சொல் தரவு:
* Strong's: H821, G5438