ta_tw/bible/names/succoth.md

2.3 KiB

சுக்கோத்

வரையறை:

சுக்கோத் இரண்டு பழைய ஏற்பாட்டு நகரங்களின் பெயர். வார்த்தை, "சுக்கோத்" (அல்லது "சுக்கோத்") என்பது "முகாம்களில்" என்று பொருள்.

  • சுக்கோத் என்று அழைக்கப்படும் முதல் நகரம் யோர்தான் நதிக்கு கிழக்கே அமைந்துள்ளது.

யாக்கோபு தன்னுடைய குடும்பத்தாரோடு சுக்கோத்தில் தங்கியிருந்தார், அங்கு அவர்களுக்குக் குடியிருப்புகளைக் கட்டினார்.

  • நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, கிதியோனும் அவனது சோர்வுற்ற ஆட்களும் மீதியானியர்களைத் துரத்திக்கொண்டிருந்தபோது சுக்கோத்தில் இருந்தார்கள், ஆனால் அங்கு மக்கள் உணவு கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
  • இரண்டாவது சுக்கோத் எகிப்தின் வடக்கு எல்லையில்தான் அமைந்துள்ளது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தப்பியோடியபோது, ​​செங்கடலை கடந்து சென்றபின் இஸ்ரவேலர் தடுத்து நிறுத்திய இடமாக இருந்தது.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5523, H5524