ta_tw/bible/names/boaz.md

2.3 KiB

போவாஸ்

உண்மைகள்:

ரூத்தின் கணவரும் தாவீது ராஜாவின் தாத்தாவும் இயேசு கிறிஸ்துவின் மூதாதையுமான போவாஸ் ஒரு இஸ்ரவேலனாக இருந்தார்.

  • போவாஸ் இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் இருந்த சமயத்தில் வாழ்ந்தான்.
  • தன் கணவர் மற்றும் மகன்கள் மோவாபில் இறந்தபின் இஸ்ரவேலுக்குத் திரும்பி வந்த நவோமி என்ற ஒரு இஸ்ரவேல் பெண்ணின் உறவினராக போவாஸ் இருந்தார்.
  • போவாஸ் நகோமியின் விதவையான மருமகளான ரூத்தை மணந்து, கணவனாக மற்றும் குழந்தைகளைப்பெற்றுஅவளுக்கு ஒரு எதிர்காலத்தை அளித்ததன் மூலம் "மீட்டுக்கொண்டார்."
  • இயேசு எப்படி நம்மை இரட்சித்தார் என்பதையும், பாவத்திலிருந்து நம்மை விடுவித்ததையும் இது காட்டுகிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: மோவாப், மீட்டெடுத்தல், ரூத்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1162