ta_tw/bible/names/abijah.md

2.3 KiB

அபியா

உண்மைகள்

யூதாவை கி. மூ 915 முதல் 913 வரை அபியா அரசாண்டான். அவன் ரேகோபெயாம் என்ற அரசனின் மகன். அபியா என்ற பெயருள்ள அநேகர் பழைய ஏற்பாட்டில் இருந்தனர்.

  • சாமுவேலின் குமாரர்களாகிய அபியாவும், யோவேலும் பெயர்செபாவில் தலைவர்களாக இருந்து இஸ்ரவேல் மக்களை வழி நடத்தினார்கள். அபியாவும் அவனது சகோதரனும் நேர்மையற்றவர்களகவும், பேராசைக்காரர்களாகவும் இருந்தபடியால், சாமுவேலிடம் இவர்களுக்கு பதிலாக இராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
  • அபியா தாவீது இராஜாவின் காலத்தில் ஆலயத்தின் ஆசாரியர்களில் ஒருவனாக இருந்தான்.
  • அபியா எரோபெயாம் அரசனின் மகன்களில் ஒருவன்
  • அபியா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு செருபாபேலுடன் திரும்பின பிரதான ஆசாரியன்.

(மொழிபெயர்ப்பு யோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது

வேத குறிப்புரைகள்

சொல் தரவு:

  • Strong's: H29, G7