ta_tw/bible/kt/zealous.md

3.9 KiB

வைராக்கியம், வைராக்கியமாக

விளக்கங்கள்

“வைராக்கியம்” மற்றும் “வைராக்கியமாக” என்ற சொற்கள், ஒரு நபர் அல்லது கருத்தை மிகவும் வலியுறுத்துவதைக் குறிக்கின்றன.

  • வைராக்கியம் என்பது நல்ல நோக்கத்தை வளர்ப்பதற்காக கொண்டிருக்கும் வலுவான ஆர்வத்தையும் செயல்களையும் உள்ளடக்கியுள்ளது. இது பொதுவாக, தேவனுக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து, அதை மற்றவர்களும் செய்யும்படி கற்பிக்கிற ஒருவரைக் குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
  • வைராக்கியமாக இருத்தல் என்பது, ஒரு காரியத்தைச் செய்வதில் தீவிர முயற்சி செய்து, அந்த முயற்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதாகும்.
  • “கர்த்தருடைய வைராக்கியம்” அல்லது “யாவேயின் வைராக்கியம்” என்பது, தம்முடைய மக்களை ஆசீர்வதிப்பதற்கு அல்லது நீதி செய்யப்படுவதைக் காண்பதற்கான தேவனுடைய பலமான, மனவுறுதி மிக்க செயல்களைக் குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • “வைராக்கியமாக இரு” என்பதை “தளராத ஊக்கமுடையவனாக இரு” அல்லது “தீவிரமான முயற்சி செய்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “வைராக்கியம்” என்ற சொல்லை “ஆற்றல்மிக்க பக்தி” அல்லது “ஆர்வம்மிக்க மனவுறுதி” அல்லது “நீதியான ஆர்வம்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “உமது வீட்டிற்காக வைராக்கியம்” என்ற சொற்றொடரை “உமது தேவாலயத்தை அதிகமாக கனப்படுத்துதல்” அல்லது “உமது வீட்டைக் கவனிப்பதற்கு உணர்வுப்பூர்வமான விருப்பம்” என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H7065, H7068, G2205, G2206, G2207, G6041