ta_tw/bible/kt/woe.md

4.2 KiB

ஐயோ

விளக்கம்:

“ஐயோ” என்ற பதம், மிகக் கொடிய துயரத்தினால் உண்டாகும் உணர்ச்சியைக் குறிக்கிறது. மேலும் இது ஒருவர் கடுமையான துன்பத்தை அனுபவிக்கப்போகிறார்கள் என்று எச்சரிப்பைக் கொடுக்கிறது.

  • “ஐயோ” என்பது, மக்கள், தங்கள் பாவங்களுக்குத் தண்டனையாக துன்பத்தை அனுபவிக்கப்போகிறார்கள் என்ற எச்சரிப்புடன் இணைத்து வருகிறது.
  • வேதாகமத்தில் அநேக இடங்களில், மிகப் பயங்கரமான நியாயத்தீர்ப்பை வலியுறுத்துவதற்காக “ஐயோ” என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது.
  • “எனக்கு ஐயோ” என்று கூறும் ஒரு நபர், மிகக் கொடிய துன்பத்தைக் குறித்து தன் துக்கத்தை வெளிப்படுத்துகிறார்.

மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்:

பின்னணியை அடிப்படையாகக் கொண்டு, “ஐயோ” என்ற பதத்தை, “மிகப் பெரிய துக்கம்” அல்லது “கவலை” அல்லது “பேரிடர்” அல்லது “பேரழிவு” என்று மொழிபெயர்க்கமுடியும்.

  • “(நகரத்தின் பெயர்)க்கு ஐயோ” என்பதை நேரு வகையில் மொழிபெயர்க்கும் போது, “(நகரத்தின் பெயர்)க்கு எவ்வளவு பயங்கரம் நேரிடும்” அல்லது, “(நகரத்தில்) உள்ள மக்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்”, அல்லது “அந்த மக்கள் மிகவும் அதிகமாக துன்பப்படுவார்கள்” என்ற வார்த்தைகளை உள்ளடக்கிஇருக்கலாம்.
  • “ஐயோ” அல்லது “எனக்கு ஐயோ” என்பதை நான் எவ்வளவு கவலையாக இருக்கிறேன்” அல்லது நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்” அல்லது “இது எனக்கு எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது” என்றும் மொழிபெயர்க்கமுடியும்.
  • "உங்களுக்கு ஐயோ" என்ற வார்த்தையை "நீங்கள் மிகவும் துன்பப்படுவீர்கள்" அல்லது "நீங்கள் கொடூரமான பிரச்சனைகளை அனுபவிப்பீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H188, H190, H337, H480, H1929, H1945, H1958, G3759