ta_tw/bible/kt/foolish.md

4.4 KiB

முட்டாள், முட்டாள்கள், முட்டாள்தனம், மடையன்

வரையறை:

"முட்டாள்" என்ற வார்த்தை பெரும்பாலும் தவறான தேர்வுகள் செய்கிற ஒரு நபரைக் குறிக்கிறது, குறிப்பாக கீழ்ப்படியாமையை தேர்ந்தெடுக்கும். "முட்டாள்தனம்" என்ற வார்த்தை ஒரு நபர் அல்லது நடத்தை ஞானமல்ல என்பதை விவரிக்கிறது.

  • வேதாகமத்தில் "முட்டாள்" என்ற வார்த்தையை பொதுவாக தேவனை நம்பாத அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியாத ஒரு நபரைக் குறிக்கிறது. தேவனை நம்புவதும் தேவனுக்குக் கீழ்ப்படிவதும் ஞானமுள்ள மனிதருக்கு இது பெரும்பாலும் வேறுபடுகிறது.
  • சங்கீதத்தில், தாவீது தேவனை நம்பாத ஒரு மனிதனை முட்டாள் என்று விவரிக்கிறார், தேவனுடைய படைப்புகளில் தேவன் இருக்கிறார் என்ற எல்லா ஆதாரங்களையும் அவன் அசட்டைபடுத்துகிறான்.
  • பழைய ஏற்பாட்டு புத்தகமாகிய நீதிமொழிகள் ஒரு முட்டாள் அல்லது முட்டாள்தனமான நபர் யார் என்ற பல விளக்கங்களை அளிக்கிறது.
  • "முட்டாள்" என்ற வார்த்தை புத்திசாலித்தனமில்லாத செயலை குறிக்கிறது, ஏனென்றால் அது தேவனுடைய சித்தத்திற்கு எதிராக இருக்கிறது. பெரும்பாலும் "முட்டாள்தனம்" மோசம் அல்லது அபாயகரமான ஒன்றின் அர்த்தத்தையும் உள்ளடக்கியிருக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "முட்டாள்" என்ற வார்த்தை "முட்டாள்தனமான நபர்" அல்லது "புத்தியில்லாதவர்" அல்லது "புத்தியில்லாதவர்" அல்லது "தேவபக்தியற்றவர்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "முட்டாள்தனமான" என்பதை மொழிபெயர்ப்பதற்கான வழிகள் "புரிந்துகொள்ள முடியாதவை" அல்லது "புத்தியில்லாதவை" அல்லது "ஞானமில்லாதவை" அடங்கும்.

(மேலும் காண்க: ஞானம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H191, H196, H200, H1198, H1984, H2973, H3684, H3687, H3688, H3689, H3690, H5034, H5036, H5039, H5528, H5529, H5530, H5531, H6612, H8417, H8602, H8604, G453, G454, G781, G801, G877, G878, G3471, G3472, G3473, G3474, G3912