ta_tw/bible/kt/cornerstone.md

4.4 KiB

மூலைக்கல், மூலைக்கற்கள்

வரையறை:

" மூலைக்கல் " என்ற வார்த்தை, , அது ஒரு கட்டடத்தின் அஸ்திவாரத்தின் மூலையில் வைக்கப்படும் சிறப்பு வடிவமாக வெட்டப்பட்ட ஒரு பெரிய கல்லைக் குறிக்கின்றது.

  • கட்டிடத்தின் அனைத்து மற்ற கற்களும் மூலைக்கல்லை அடிப்படியாகக்கொண்டு அளவிடப்பட்டு கட்டப்படுகிறது.
  • முழு கட்டமைப்புகளின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டிற்காக இது மிகவும் முக்கியமானது.
  • புதிய ஏற்பாட்டில், விசுவாசிகள் கூடுகையானது, இயேசு கிறிஸ்துவை அதன் " மூலைக்கல்லாகக்" கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்துடன் உருவகமாக ஒப்பிடுகின்றது.
  • ஒரு கட்டிடத்தின் மூலைக்கல்லானது முழு கட்டிடத்தின் கட்டமைப்பு மற்றும் வடிவத்தை நிர்ணயிப்பதைப்போலவே, விசுவாசிகளின் கூடுகையானது நிறுவப்பட்டு பலப்படுத்தப்படுவதற்கு இயேசு சபைக்கு மூலைக்கல்லாக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • " மூலைக்கல் "என்ற வார்த்தையை " கட்டிடத்தின் முக்கியமான கல்" அல்லது "அடித்தளக் கல்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
  • முக்கிய ஆதாரமாக இருக்கும் கட்டிடத்தின் அஸ்திபாரத்தின் பகுதிக்கு இலக்கு மொழியில் ஒரு சொல் இருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். அப்படியானால், இந்த சொல்லை பயன்படுத்தலாம்.
  • இதை மொழிபெயர்க்க மற்றொரு வழி, "ஒரு கட்டிடத்தின் மூலையில் பயன்படுத்தப்படும் ஒரு அடித்தள கல் என்பதாகும்.
  • இது திடமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய கல் என்ற உண்மையை மனதில் நிறுத்துவது முக்கியம் ஆகும்.. கட்டடங்களைக் கட்டுவதற்காக கற்கள் பயன்படுத்தப்படவில்லை என்றால், "பெரிய கல்" ("பாறை" போன்றது) என்று பொருள்படும் மற்றொரு வார்த்தையும் இருக்கலாம், ஆனால் இது நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் பொருந்தக்கூடியதாக இருக்கும் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H68, H6438, H7218, G204, G1137, G2776, G3037