ta_tw/bible/kt/boast.md

5.3 KiB

தற்பெருமைகொள், தற்பெருமைகொள்கிறான், தற்பெருமைநிறைந்த

வரையறை:

"தற்பெருமை" என்ற வார்த்தை ஒரு காரியத்தைக் குறித்தோ அல்லது நபரைக்குறித்தோ பெருமையாக பேசுவதாகும். பெரும்பாலும் அது தன்னை பற்றி தற்பெருமைபேசுதல் என்று அர்த்தம்.

  • தன்னைப்பற்றி பெருமையாக பேசும் ஒருவன் பெருமையுடன் பேசுகிறான்.
  • தங்கள் விக்கிரகங்களிலே "பெருமை பாராட்டின" இஸ்ரவேலரை தேவன் கடிந்து கொண்டார். அவர்கள் உண்மையான தேவனுக்குப் பதிலாக பொய்க் கடவுள்களை வணங்கினார்கள்.
  • மக்கள் தங்கள் செல்வங்கள், பலம், வளமான விளைநிலங்கள், அவர்களுடைய சட்டங்கள் போன்றவற்றைப் பற்றி பெருமை பேசுவதைப் பற்றி வேதாகமம் சொல்கிறது. இந்த விஷயங்களைப் பற்றி அவர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர் என்பதையும், இவைகளை தேவன் அளித்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.
  • இஸ்ரவேலர்கள் தாங்கள் அவரை அறிந்திருப்பதைப் பற்றி பெருமிதம் கொள்ளும்படி தேவன் உந்துவித்தார்.
  • அப்போஸ்தலனாகிய பவுல் தேவனிடத்தில் பெருமை பாராட்டுவதைப் பற்றி பேசுகிறார், அதாவது, அவர் செய்த அனைத்திற்கும் தேவனுக்குக்கு நன்றி செலுத்துகிறார், நன்றியுடன் இருப்பார் என்று அர்த்தம்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "தற்பெருமை" என்பதை மொழிபெயர்க்கும் மற்ற வழிகள் "கர்வம்" அல்லது "பெருமை பேசுதல்" அல்லது "கர்வமாக இருத்தல்" ஆகியவை அடங்கும்.
  • "தற்பெருமை" என்ற வார்த்தையை ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரால் "பெருமையுடன் பேசுதல்" அல்லது "பெருமைக்குரியது" அல்லது "தன்னைப் பற்றி பெருமையாக பேசுவது" மொழிபெயர்க்கலாம்.
  • தேவனை அறிந்துகொள்வது அல்லது கடவுளைப் பற்றி பெருமை பேசுவதன் பின்னணியில், இது "பெருமை கொள்ளுங்கள்" அல்லது "உயர்ந்ததாக" அல்லது "மிகுந்த சந்தோஷமாயிருங்கள்" அல்லது "தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • சில மொழிகளில் "பெருமை என்பதற்கு" இரண்டு சொற்கள் உள்ளன: ஒன்று எதிர்மறையானது, அதாவது திமிர்த்தனமாக இருப்பது, மற்றொன்று நேர்மறையானது, ஒருவரின் வேலை, குடும்பம் அல்லது நாடு ஆகியவற்றில் பெருமை கொள்வதாகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

(மேலும் காண்க: பெருமை)

பைபிள் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1984, H3235, H6286, G212, G213, G2620, G2744, G2745, G2746, G3166