ta_tw/bible/kt/blood.md

7.0 KiB

இரத்தம்

வரையறை:

காயம் ஏற்பட்டால் ஒரு நபரின் தோலில் இருந்து வரும் சிவப்பு திரவத்தை "இரத்தம்" என்ற சொல் குறிக்கிறது. ஒரு நபரின் முழு உடலுக்கும் உயிர் கொடுக்கும் ஊட்டச்சத்துக்களை இரத்தம் தருகிறது.

  • இரத்தமானது உயிரை அடையாளமாகக் குறிக்கிறது, அது கொட்டப்படுகையில் அல்லது ஊற்றப்படுகையில், அது உயிர் இழப்பு அல்லது மரணத்தை குறிக்கிறது.
  • மக்கள் தேவனுக்குப் பலிகொடுத்தபோது, ​​அவர்கள் ஒரு மிருகத்தைக் கொன்று பலிபீடத்தின்மேல் இரத்தத்தை ஊற்றினார்கள். இது மக்களின் பாவங்களுக்காக செலுத்த வேண்டிய மிருகத்தின் உயிர் தியாகத்தை அடையாளப்படுத்தியது.
  • சிலுவையில் அவர் இறந்ததன் மூலம், இயேசுவின் இரத்தத்தினால் மக்களுடைய பாவங்களை முற்றிலும் நீக்கி, அவர்களுடைய பாவங்களுக்காக அவர் பெற்ற தண்டனையைக குறிப்பிடுகிறது.
  • "மாம்சமும் இரத்தமும்" என்ற வார்த்தை மனிதர்களை குறிக்கிறது.
  • "சொந்த மாம்சமும் இரத்தமும்" என்ற சொற்றொடரை உயிரியல் ரீதியாக சம்பந்தப்பட்ட மக்களை குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சொந்த மொழியில் இரத்தம் பயன்படுத்தப்படும் அர்த்தத்துடன் இந்த வார்த்தை மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
  • "மாம்சமும் இரத்தமும்" என்ற சொற்றொடரை "மக்கள்" அல்லது "மனிதர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • சூழ்நிலையைப் பொறுத்து, "என் சொந்த மாம்சமும் இரத்தமும்" என்ற வார்த்தை "என் சொந்த குடும்பம்" அல்லது "என் சொந்த உறவினர்கள்" அல்லது "என் சொந்த மக்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிற சொந்த மொழியில் வெளிப்பாடு இருந்தால், அந்த சொற்றொடரை "சதை மற்றும் இரத்தத்தை" மொழிபெயர்க்க பயன்படுத்தலாம்.

(மேலும் காண்க: சதை)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 8:3 யோசேப்பின் சகோதரர்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பே, யோசேப்பின் அங்கியைக் கிழித்து, ஆட்டுஇரத்தத்தில் அதை நனைத்தார்கள்.
  • 10:3 தேவன் நைல் நதியை இரத்தமாக மாற்றினார், ஆனால் பார்வோன் இன்னும் இஸ்ரவேலரைப் போக விடமறுத்தான்.
  • 11:5 இஸ்ரவேலின் எல்லா வீடுகளின் கதவுகளில் இரத்தம் பூசப்பட்டிருந்தன, அதனால் தேவன் அந்த வீடுகளை கடந்துசென்றார் உள்ளே இருந்தவர்கள் பாதுகாப்பாக இருந்தனர். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் அவர்கள் இரட்சிக்கப்பட்டனர்.
  • 13:9 தியாகம் செய்யப்பட்ட மிருகத்தின் இரத்தம் மனிதனின் பாவத்தை மூடி, தேவனுடைய பார்வையில் அந்த நபரை சுத்தமானவராக மாற்றுகிறது.
  • 38:5 பிறகு இயேசு ஒரு பாத்திரத்தை எடுத்து, "இதைப் பானம்பண்ணுங்கள்! இது புதிய உடன்படிக்கையின் இரத்தமாக இருக்கிறது இதுபாவத்தின் மன்னிப்புக்காக ஊற்றப்படுகிறது.
  • 48:10 இயேசுவை யாரெல்லாம் நம்புகிறார்களோ, அந்த நபரின் பாவத்தை அவரின் இரத்தம் மாற்றுகிறது, தேவனின் தண்டனை அவர்மீது கடந்து செல்கிறது.

சொல் தரவு:

  • Strong's: H1818, H5332, G129, G130, G131, G1420