ta_obs/content/48.md

12 KiB

48. இயேசு தான் வாக்குத்தத்தம் பண்ணபட்ட மேசியா

OBS Image

தேவன் இந்த உலகத்தை படைத்த போது, எல்லாம் நன்றாய் இருந்தது. பாவம் இல்லாதிருந்தது. ஆதாமும் ஏவாளும் ஒருவரையொருவர் நேசித்து, தேவனையும் நேசித்தார்கள். வியாதியோ மரணமோ இல்லை. தேவன் விரும்பினபடியே உலகம் இருந்தது.

OBS Image

தோட்டத்தில் ஒரு பாம்பின் மூலமாக சாத்தான் ஏவாளோடு பேசி, அவளை வஞ்சித்தான். பின்பு ஏவாளும் ஆதாமும் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தனர். அவர்கள் பாவம் செய்ததினால் தான் எல்லோரும் மரிக்கின்றனர்.

OBS Image

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததினால் மோசமான காரியம் ஒன்று நடந்தது. அது என்னவென்றால் அவர்கள் தேவனுக்கு விரோதிகளாக மாறினர். அவர்கள் பாவம் செய்ததின் விளைவாக எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே தேவனுக்கு விரோதிகளாக இருக்கின்றனர். தேவனுக்கும் ஜனங்களுக்கு உறவு இல்லை, ஆனால் தேவன் அதை ஏற்படுத்த விரும்புகிறார்.

OBS Image

ஏவாளுடைய சந்ததி சாத்தானின் தலையை நசுக்கும் என்று தேவன் வாக்குப்பணினார். மேலும் அவருடைய குதிகாலை சாத்தான் கடிப்பான் என்றும் சொன்னார், அதாவது தெளிவாக சொல்ல வேண்டுமானால், சாத்தான் மேசியாவைக் கொலை செய்வான், ஆனால் தேவன் அவரை மறுபடியும் மரணத்திலிருந்து எழுப்புவார், அதன் பிறகு, மேசியா என்றென்றைக்கும் சாத்தானின் வல்லமையை முறியடிப்பார். அநேக வருடங்களுக்குப் பின் அந்த மேசியா இயேசுவே என்று தேவன் புரியும்படி செய்தார்.

OBS Image

வரபோகும் வெள்ளத்திலிருந்து நோவாவின் குடும்பத்தை பாதுகாக்க, அவனிடத்தில் ஒரு பேழையை செய்யும்படி தேவன் சொன்னார். அவரை நம்புகிறவர்களை தேவன் இவ்விதமாக பாதுகாக்கிறார். இதேபோல, எல்லோரும் பாவம் செய்து தேவன் நம்மை கொன்றுபோட பாத்திரவான்களாய் இருந்தும், இயேசுவை நம்புகிறவர்களை இரட்சிக்கும்படிக்கு தேவன் அவரை அனுப்பினார்.

OBS Image

அநேக நூற்றாண்டுகளாக ஆசாரியர்கள் தொடர்ந்து தேவனுக்கு பலிகளை செலுத்தி வந்தனர். ஜனங்கள் பாவம் செய்து தேவனுடைய தண்டனைக்கு பாத்திரவான்களாய் இருக்கும் போது இந்த பலிகள் அவர்களுடைய பாவங்களை மன்னிக்க முடியவில்லை. அதினால் பிரதான ஆசாரியரான இயேசு யாரும் செய்ய முடியாததை செய்தார். அதாவது தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்து, எல்லோருடைய பாவங்களையும் நீக்கினார். எல்லோருடைய பாவங்களுக்காகவும் தேவன் அவரை தண்டித்தே ஆகவேண்டும் என்று, அதை ஏற்றுக் கொண்டதினால் தான் இயேசு பூரணமான பிரதான ஆசாரியன் ஆனார்.

OBS Image

ஆபிரகாம் மூலமாக இந்த உலகத்தில் இருக்கும் எல்லா ஜனங்களையும் தேவன் ஆசீர்வதிப்பதாக அவனிடத்தில் சொன்னார். இயேசு ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர். எனவே இயேசுவை நம்புகிற யாவரையும் தேவன் பாவத்திலிருந்து இரட்சித்து, எல்லோரையும் ஆசீர்வதிக்கிறார். ஜனங்கள் இயேசுவை நம்பும்போது அவர்களை ஆபிரகாமின் சந்ததியாக தேவன் ஏற்றுக் கொள்கிறார்.

OBS Image

ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கை அவருக்கு பலி செலுத்தும்படி தேவன் சொன்னார். பின்பு ஒரு ஆட்டுக்குட்டியை ஈசாக்குக்கு பதிலாகக் கொடுத்தார். அதேபோல நாம் எல்லோரும் பாவம் செய்து மரணத்திற்கு பாத்திரவான்களாய் இருந்தோம்! ஆனால் தேவன் நம்முடைய பாவங்களுக்காய் பலியாக இயேசுவை மரிக்கும்படிச் செய்தார். அதினால் தான் இயேசுவை நாம் ஆட்டுக் குட்டியானவர் என்று சொல்லுகிறோம்.

OBS Image

எகிப்தில் தேவன் கடைசி வாதையை அனுப்பும் போது இஸ்ரவேலர் எல்லோருடைய வீட்டிலும் ஒரு பழுதில்லாத ஆட்டுக்குட்டியை கொள்ளும்படி சொன்னார். பின்பு அதின் இரத்தத்தை எடுத்து கதவின் நிலத்தில் பூசும்படி சொன்னார். ஏனென்றால் தேவன் அந்த இரத்தத்தைப் பார்த்து, அவர்களுடைய முதல் குமாரர்களை அழிக்காமல், அவர்களுடைய வீட்டைக் கடந்து போவார். இது நடந்த போது தேவன் அதை பஸ்கா என்று சொன்னார்.

OBS Image

இயேசு ஒரு பஸ்கா ஆட்டுக்குட்டி, அவர் பாவம் ஒன்றும் செய்யவில்லை. மேலும் அவர் பஸ்கா பண்டிகையின் சமயத்தில் தான், இயேசுவும் மரித்தார். இயேசு பாவங்களுக்கு பரிகாரமாக இரத்தம் சிந்தினதினால், எவன் ஒருவன் இயேசுவை விசுவாசிக்கிரானோ அவனை தேவன் தண்டிக்காமல், அந்த பஸ்காவில் எப்படி கடந்து போனாரோ அதேபோல அவனையும் கடந்து போவார்.

OBS Image

தேவன் அவருடைய ஜனமாக இஸ்ரவேலரைத் தெரிந்தெடுத்ததினால், அவர்களோடு உடன்படிக்கை செய்திருந்தார். ஆனால், இப்போது எல்லா ஜனங்களுக்காகவும் புதிய உடன்படிக்கை செய்திருக்கிறார். இயேசுவை விசுவாசிக்கிற யாராக இருந்தாலும் அவர்களை தேவ ஜனங்களோடு சேர்த்து, அந்த புதிய உடன்படிக்கையில் சேர்த்துக் கொள்கிறார்.

OBS Image

மோசே ஒரு தீர்கத்தரிசியாக மிகுந்த வல்லமையோடு தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்தான். ஆனால் எல்லா பெரிய தீர்க்கதரிசிகளிலும் இயேசுவே பெரியவர். ஏனெனில் அவர் தேவனாயிருந்து, எல்லாவற்றையும் செய்து, தேவனுடைய வார்த்தைகளையும் போதித்தார். அதினால் தான் இயேசுவே தேவனுடைய வார்த்தை என்று வேதம் சொல்லுகிறது.

OBS Image

தாவீதின் சந்ததி என்றென்றைக்கும் தேவனுடைய ஜனங்களுக்கு ராஜாவாக இருப்பார்கள் என்று தேவன் வாக்குப் பண்ணியிருந்தார். தாவீதின் சந்ததியில் வந்த மேசியா அந்த இயேசு தான், எனவே அவர் என்றென்றைக்கும் ஆட்சி செய்வார்.

OBS Image

தாவீது இஸ்ரவேலின் ராஜா, ஆனால் இயேசு இவ்வுலகம் முழுவதுக்கும் ராஜா! அவர் மறுபடியும் வருவார், வந்து ஜனங்களை நீதியோடும், சமாதானத்தோடும் என்றென்றும் ஆட்சி செய்வார்.

வேதாகம கதை: அதியாகமம் 1-3, 6, 14, 22; யாத்திராகமம் 12, 20; 2 சாமுவேல் 7; எபிரெயர் 3:1-6, 4:14-5:10, 7:1-8:13, 9:11-10:18; வெளிப்படுத்தல் 21